Connect with us

அரசியல் தொடர்பான காட்சிகள்.. ஜனநாயகன் படத்தில் இதெல்லாம் இருக்கா?..

Tamil Cinema News

அரசியல் தொடர்பான காட்சிகள்.. ஜனநாயகன் படத்தில் இதெல்லாம் இருக்கா?..

Social Media Bar

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. ஏனெனில் விஜய் நடிக்கும் கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படம் இருந்து வருகிறது.

ஜனநாயகன் திரைப்படத்தின் முக்கியத்துவத்திற்கு இன்னொரு காரணம் அரசியல் சார்ந்த விஷயங்களே என்று கூறலாம். ஏனெனில் விஜய் அரசியலுக்கு வந்து விட்ட காரணத்தினால் கண்டிப்பாக ஜனநாயகன் திரைப்படத்தில் அரசியல் சார்ந்த நிறைய விஷயங்களை வைத்திருப்பார் என்பது மக்களின் எண்ணமாக இருந்து வந்தது.

படத்தை இயக்கும் ஹெச். வினோத்தும் நிறைய ஆய்வுகளை செய்து திரைப்படங்களை இயக்கக் கூடியவர் அவர் ஏற்கனவே இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று மாதிரியான திரைப்படங்களில் நிறைய விஷயங்களை ஆய்வு செய்து வைத்திருப்பதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்திலும் அரசியல் சார்ந்து அவ்வாறு நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தில் ஓட்டு போடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

மதுரை மற்றும் பல மாவட்டங்களில் இந்த ஓட்டு போடும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. எனவே கண்டிப்பாக அரசியல் சார்ந்து இந்த படத்தில் நிறைய காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

To Top