Tamil Cinema News
ஜேசன் சஞ்சய் படம் குறித்து வந்த அப்டேட்..! அந்தளவுக்கு ரெடி ஆகிடுச்சா?.
நடிகர் விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் முழுவதுமாக சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இப்போது ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு மொத்தமாக சினிமாவில் இருந்து விலகுகிறார் விஜய். இந்த நிலையில் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் தற்சமயம் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஜேசன் சஞ்சய், ஆரம்பத்தில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்றுதான் ஜேசன் சஞ்சய்க்கு ஆசை.
எனவே வெளிநாட்டிற்கு சென்று இயக்குனர் ஆவது குறித்த விஷயங்களை கற்றுக்கொண்டு இப்பொழுது திரைப்படம் இயக்க வந்திருக்கிறார். இவரது திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த திரைப்படம் ஒரு சின்ன பட்ஜெட் படம் தான் என்றும் கூறப்படுகிறது. இன்னும் பாதி படப்பிடிப்பு இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கு ஒரு டீசரும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.
