அந்த ஒரு இயக்குனர் படம்தான் காரணம்.. ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்துக்கு காரணமான எஸ்.கே பட இயக்குனர்…

கடந்த சில காலங்களாகவே தமிழ் சினிமாவில் விவாகரத்து பிரச்சனை என்பது அதிகரித்து வருகிறது. தொடர்ந்து பிரபலங்கள் தங்களது மனைவிகளை விவாகரத்து செய்து வருகின்றனர். முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை என்று நடந்து வந்ததால் பெரிதாக மக்கள் மத்தியில் தெரியாமல் இருந்தது.

ஆனால் இப்பொழுதெல்லாம் தொடர்ந்து விவாகரத்து நடந்து வருகிறது இந்த வருடம் துவங்கி இது தற்சமயம் ஜெயம் ரவி யுடன் சேர்த்து மூன்றாவது விவாகரத்து விஷயமாக இருக்கிறது. ஏற்கனவே நடிகர் தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் விவாகரத்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து:

Social Media Bar

இதற்கு நடுவே ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து நடக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகிறது. இது குறித்து பல்வேறு வகையான வதந்திகள் பரவி வருகின்றன.

அதில் எது உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ஜெயம் ரவியின் மாமியாரான சுஜாதா விஜயகுமார் தமிழ் திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.

அவர் தொடர்ந்து ஜெயம் ரவியின் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் ஆனால் சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் இயக்குனர் பாண்டியராஜ் ஜெயம் ரவியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தார்.

சம்பள பிரச்சனையில் வந்த சண்டை:

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஜெயம் ரவி 25 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தையும் ஜெயம் ரவியின் மாமியார்தான் தயாரிக்க இருந்தார். இந்த நிலையில் தனது மாப்பிள்ளையிடம் சம்பளத்தை குறைக்க சொல்லி கேட்க முடியாது என்று நினைத்த அவர் இயக்குனரிடம் சென்று படத்தின் பட்ஜெட்டை குறைக்க சொல்லி இருக்கிறார்.

jayam-ravi
jayam-ravi

இதனால் வருத்தம் அடைந்த இயக்குனர் ஜெயம் ரவிக்கு பதிலாக அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைத்து படபிடிப்பை துவங்கினார். இதனால் விரக்தி அடைந்த ஜெயம் ரவி மாமியாருடன் அடிக்கடி இது தொடர்பாக சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பிரச்சனையில் ஜெயம் ரவியின் மனைவியும் தலையிட்டதால் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது அதுதான் தற்சமயம் விவாகரத்துக்கு கொண்டு வந்து முடிந்திருக்கிறது என்று கூறப்படுகிறது இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதனும் இதே கருத்தை முன்வைத்து இருக்கிறார்.