Tamil Cinema News
மும்பையில் செட்டில் ஆக இதுதான் காரணம் ? அதிர்ச்சி கொடுத்த ஜெயம் ரவி.. வாழ்க்கையே மாறி போச்சி..!
நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து தமிழ் சினிமாவில் எப்படியாவது மீண்டும் ஒரு வெற்றிகரமான கதாநாயகனாக மாறிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.
ஏனெனில் முன்பெல்லாம் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பெரும்பான்மையான திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. ஆனால் இப்பொழுது ஜெயம் ரவி நடிக்கும் படங்களுக்கு பெரிதாக வரவேற்புகளே கிடைப்பது இல்லை.
சமீபத்தில் வெளியான பிரதர் திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியை பெற்று தரவில்லை. இதனை தொடர்ந்து அவருக்கு தனது மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து தமிழ்நாட்டை விட்டே போகப் போகிறார் என்றெல்லாம் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன.
பாலிவுட் சென்ற ஜெயம் ரவி:
அதற்கு தகுந்தார் போல மும்பைக்கு சென்று பாலிவுட்டிலும் ஜெயம் ரவி கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து ஜெயம் ரவி கூறும்போது பாலிவுட்டில் நடிக்கும்போது அங்கேயே தங்கி சில விஷயங்களை பார்க்க வேண்டி உள்ளது.
அதனால் நான் மும்பையில் தங்குவதை தவிர்க்க முடியாது என்று கூறினார். அப்படி என்றால் உண்மையிலேயே மும்பையில் செட்டில் ஆகிறீர்களா என்று அவரிடம் கேட்டப்போது அதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி அப்படி சொல்ல முடியாது.
தமிழிலும் நான் ஆறு திரைப்படங்களில் நடித்து வருகிறேன் பாலிவுட்டிலும் சேர்த்து நடிக்கிறேன் அவ்வளவுதான் மற்றபடி எனக்கு எனக்கு தமிழ் தான் எப்போதுமே என்று கூறியிருக்கிறார் ஜெயம் ரவி.
