Connect with us

அந்த ஜெயம் ரவி படத்துக்கு அனுமதி தர முடியாது!.. சென்சார் குழுவால் இழுபறியில் சிக்கிய திரைப்படம்!..

jayam ravi

News

அந்த ஜெயம் ரவி படத்துக்கு அனுமதி தர முடியாது!.. சென்சார் குழுவால் இழுபறியில் சிக்கிய திரைப்படம்!..

Social Media Bar

Jayam Ravi : பொன்னியின் செல்வன் தவிர ஜெயம் ரவிக்கு பெரிதாக வரவேற்பை தரும் படம் என்று தற்சமயம் வெளியான எந்த திரைப்படமும் அமையவில்லை. ஆரம்பத்தில் தன்னுடைய முதல் திரைப்படத்தின் மூலமாகவே பெரிதாக வரவேற்பை பெற்றவர் ஜெயம் ரவி.

அதற்கு பிறகு அவர் நடித்த எம்.குமரன், சந்தோஷ் சுப்பிரமணியம் ,சம்திங் சம்திங் போன்ற எல்லா திரைப்படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அது ஜெயம் ரவிக்கும் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தி கொடுத்தது.

ஆனால் சமீப காலமாக ஜெயம் ரவி நடிக்கும் எந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்படுவதே இல்லை. பூமி, அகிலன், இறைவன் இப்படி வெளியான அனைத்து திரைப்படங்களுமே பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்த நிலையில் தற்சமயம் அவர் நடித்து வரும் திரைப்படம் சைரன்.

இந்த திரைப்பட கதைப்படி செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனைக்கு உள்ளாகும் ஆம்புலன்ஸ் டிரைவரான கதாநாயகன் திரும்ப பல வருடங்கள் கழித்து வெளிவந்து எதிரிகளை பழிவாங்குவதாக கதை அமைந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து விட்டன.

தற்சமயம் படத்திற்கான சென்சார் சான்றிதழை பெறுவதற்காக விண்ணப்பித்திருக்கின்றனர். ஆனால் சைரன் என்கிற பெயரில் ஏற்கனவே ஒரு திரைப்படம் பதிவு செய்யப்பட்டு சென்சாரும் வாங்கி இருப்பது அப்பொழுதுதான் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

இதனால் ஜெயம் ரவியின் திரைப்படத்திற்கு சென்சார் கொடுக்க முடியாது என்று சென்சார் அமைப்பினர் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் தற்சமயம் திரைப்படத்தின் பெயரை சைரன் 108 என்று மாற்றி சென்சார் வாங்கி இருக்கின்றனர் படக்குழுவினர். இதனால் இதற்கு முன்பு இருந்த போஸ்டரை மாற்றி சைரன் 108 என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

To Top