Connect with us

என்னை கல்யாணம் பண்ணலைனா..மனைவி குறித்து பேசிய ஜெயம் ரவி..! ட்ரெண்டாகும் வீடியோ..!

jayam ravi aarthi

Tamil Cinema News

என்னை கல்யாணம் பண்ணலைனா..மனைவி குறித்து பேசிய ஜெயம் ரவி..! ட்ரெண்டாகும் வீடியோ..!

Social Media Bar

ஜெயம் ரவி எப்போது விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அறிவித்தாரோ அப்போது முதலே அந்த பிரச்சனைகள் அதிகம் சூடு பிடிக்க துவங்கியிருக்கின்றன.

ஜெயம்ரவி நடிக்கும் பெரும்பான்மையான படங்கள் சமீபத்தில் தோல்வியைதான் கண்டு வந்தன. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சனை இருப்பதாக மூன்று மாதங்களாகவே பேச்சுக்கள் இருந்து வந்தன.

அதனை தொடர்ந்து சமீபத்தில் ஜெயம் ரவியே தனது மனைவியை விவாகரத்து செய்ய போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.  இது பல சர்ச்சைகளை எழுப்பி வந்தது. இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும்  வகையில் அவரது மனைவி ஆர்த்தியும் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

ஆர்த்தி அறிக்கை

ஏனெனில் ஜெயம் ரவி அறிக்கை வெளியிடும்பொழுது அதில் தன்னை சுற்றி இருப்பவர்களின் நலனுக்காக இந்த முடிவை எடுப்பதாக கூறியிருந்தார். இது ஆர்த்திக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்திருக்க வேண்டும்.

jayam ravi aarthi

எனவே ஆர்த்தி ஒரு பதிவை வெளியிட்டு அதில் சுற்றி உள்ளவர்களின் நன்மைக்காக எல்லாம் ஜெயம் ரவி எதையும் செய்யவில்லை. தன்னுடைய சுயநலத்திற்காக தான் செய்கிறார் என்று பேசி இருந்தார். மேலும் தன்னிடம் இது குறித்து எதுவுமே கேட்காமல் இந்த முடிவை ஜெயம் ரவி எடுத்து விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்சமயம் ஜெயம் ரவி முன்பு பேசிய வீடியோ ஒன்று அதிக வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ஆர்த்தி சினிமாவில் நடிப்பாரா என்ற கேள்விக்கு ஜெயம் ரவி பதிலளிக்கும் போது அவருக்கு சினிமாவில் எல்லாம் சுத்தமாக ஆர்வம் கிடையாது.

தொழில்கள் மீது தான் அவருக்கு அதிக ஆர்வம். ஒரு தொழிலதிபராக வேண்டும் என்பதுதான் ஆர்த்தியின் ஆசை ஒருவேளை என்னை திருமணம் செய்ய வில்லை என்றால் பெரிய தொழிலதிபர் ஆகியிருப்பார் என்று கூறியிருக்கிறார் ஜெயம் ரவி. இந்த வீடியோ இப்பொழுது டிரெண்டாகி வருகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top