Connect with us

சூர்யாவுக்கும் எனக்கும் வாழ்க்கையில் அது ஒரே மாதிரி நடந்துச்சு.. ரொம்ப மர்மமா இருக்கே!.. ஜெகன் சொன்ன சீக்ரெட்!.

surya jegan

Tamil Cinema News

சூர்யாவுக்கும் எனக்கும் வாழ்க்கையில் அது ஒரே மாதிரி நடந்துச்சு.. ரொம்ப மர்மமா இருக்கே!.. ஜெகன் சொன்ன சீக்ரெட்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் விஜய் அஜித் போன்ற பெரும் நடிகர்களுக்கு போட்டியாக இருந்து வந்தவர் நடிகர் சூர்யா. ஆனால் 10 வருட காலத்தில் அவரது மார்க்கெட்டில் ஏற்பட்ட குறைபாடு அவரை கொஞ்சம் கீழே கொண்டு வந்து விட்டது என்றாலும் சூர்யாவின் நடிப்பிற்கான வரவேற்பு மட்டும் இன்னும் குறையவே இல்லை.

ஏனெனில் மற்ற நடிகர்கள் தொடர்ந்து சண்டை காட்சிகள் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த பொழுது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்துக் கொண்டிருந்தார் சூர்யா. மேலும் சூர்யா பலருக்கும் நன்மைகள் செய்து வருவதாலும் அவருக்கு ஒரு நல்ல பெயர் உண்டு.

தற்சமயம் அவர் நடித்து வரவிருக்கும் கங்குவா திரைப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அயன் திரைப்படத்தில் சூர்யாவிற்கு நண்பனாக நடித்தவர் நடிகர் ஜெகன் அப்போதிலிருந்து சூர்யாவிற்கும் ஜெகனுக்கும் நல்ல நட்பு உண்டு .

சூர்யாவிற்கு திருமணம் ஆன மறுநாள்தான் அவரது நண்பர் ஜெகனுக்கும் திருமணம் ஆனது. ஒரு பேட்டியில் இதுக்குறித்து ஜெகன் கூறும்பொழுது திருமணம் தொடர்ச்சியாக அப்படி நடந்தது. ஆனால் குழந்தை பிறக்கும் போது கூட அப்படித்தான் நடந்தது. சூர்யாவிற்கு முதல் குழந்தை பிறந்த மறுநாள் என்னுடைய முதல் குழந்தை பிறந்தது.

சூர்யாவிற்கு இதை கேட்கும் பொழுது ஆச்சரியமாக இருந்தது எப்படி இப்படியெல்லாம் எதிர்ச்சையாக நடக்கும் என்று அவரே அதிசயப்பட்டார் என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் ஜெகன்.

To Top