Connect with us

ஜோதிகாவின் அதிரவைக்கும் பின்னணி!.. வெளுத்து வாங்கும் பத்திரிக்கையாளர்!.

jyothika

News

ஜோதிகாவின் அதிரவைக்கும் பின்னணி!.. வெளுத்து வாங்கும் பத்திரிக்கையாளர்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் சில நடிகைகளை பற்றி சர்ச்சைகள், வதந்திகள், கிசுகிசு எல்லாம் வந்து கொண்டு தான் இருக்கும். அதிலும் ஒரு படத்தில் நடிகர், நடிகைகள் தொடர்ந்து படங்கள் நடித்தால் அவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு வரும்.

அந்த வகையில் அதனை இருவரும் உறுதிப்படுத்தாத வரை அவர்களைப் பற்றிய கிசுகிசு சமூக வலைத்தளங்களில் உலாவிக்கொண்டு தான் இருக்கும். ஆனால் இதற்கு ஒரு சில ஜோடிகள் விதிவிலக்கு. ஏனென்றால் படங்களில் நடிக்கும் பொழுதே அவர்கள் காதலித்து திருமணம் செய்து தற்பொழுது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருவார்கள்.

அந்த வகையில் அனைவருக்கும் தமிழ் சினிமாவில் பிடித்த ஜோடி என்றால் சூர்யா ஜோதிகா. தற்பொழுது இவர்களைப் பற்றி தமிழா தமிழா பாண்டியன் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காதல் திருமணம் செய்து கொண்ட சூர்யா ஜோதிகா

இருவரும் படங்களில் ஒன்றாக நடித்து வந்த போது நடிகை ஜோதிகாவும், சூர்யாவும் காதலித்தனர். இவர்களின் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி திருமணம் நடந்தது.

SURIYA JYOTHIKA WEDDING

தற்போது வரை கணவருடனும் தன் குழந்தைகளுடனும் ஜோதிகா வசித்து வருகிறார். இந்நிலையில் சமீப காலங்களாக ஜோதிகா தமிழ் சினிமாவில் தென்படாத நிலையில் அவர் தற்பொழுது பாலிவுட்டில் கவனம் செலுத்தி இருக்கிறார்.

இந்நிலையில் ஜோதிகாவின் நிலையை பற்றி பிரபல சினிமா பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறி இருக்கிறார்.

சினிமா பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியது

சிவகுமார் தன்னுடைய இரு மகன்களுக்கும் சினிமாவை பின்புலமாகக் கொண்ட பெண்களை திருமணம் செய்து வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் சூர்யா காதலித்ததால் அவர் விருப்பத்திற்கு இணங்க ஜோதிகாவை அவர் திருமணம் செய்து வைத்தார். ஆனால் தன்னுடைய இரண்டாவது மகன் கார்த்திக்கு அவரின் சொந்தக்காரப் பெண்ணை தான் திருமணம் செய்து வைத்தார்.

மேலும் தற்போது சூர்யாவும், ஜோதிகாவும் சென்னையில் இல்லாத நிலையில் மும்பையில் குடிபெயர்ந்து விட்டனர். அதற்கு காரணம் தங்களுடைய குழந்தையின் படிப்பிற்காக நாங்கள் இந்த முடிவை எடுத்தோம் என ஜோதிகா தெரிவித்த நிலையில், தமிழா தமிழா பாண்டியன் கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் இருவரும் சென்னையில் இல்லாத படிப்பு மும்பையில் கொடுக்கிறார்களா? என கேட்டுள்ளார்.

suriya jothiga

மேலும் தமிழ்நாட்டில் இருந்தவரை பல நிகழ்ச்சிகளிலும் புடவையில் தோன்றிய ஜோதிகா தற்பொழுது மும்பை சென்றதும் மாடன் உடைக்கு மாறிவிட்டார் என கூறியிருக்கிறார்.

மேலும் சிவக்குமார் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகராகவும், ஒழுக்கமான மனிதராகவும் இருந்து வந்தார். எனவே அவரின் குடும்பத்தில் வாழும் பெண்களும் அவ்வாறு தான் இருக்க வேண்டும் என அவர் விரும்புவார். தற்பொழுது சூர்யாவின் குழந்தைகள் பெரிய பிள்ளைகள் ஆன நிலையில் சிவகுமார் எந்த ஒரு கட்டுப்பாட்டையும் சூர்யா மீதும் ஜோதிக்கா மீதும் திணிக்க விரும்பவில்லை. எனவே அவர்கள் சுதந்திரமாக இருக்க விட்டுவிட்டார்.

மேலும் ஜோதிகாவின் குடும்பம் மும்பையில் ஒரு பிரபலமான குடும்பம் தான். காரணம் ஜோதிகாவின் அக்கா நக்மா பிரபல நடிகை. அவரின் தந்தை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். மேலும் சாதாரண எல்லா குடும்பங்களில் நடக்கும் விஷயங்கள்தான் நடிகர்கள் குடும்பங்களிலும் நடக்கிறது. ஆனால் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடி என்பதால் ரசிகர்கள் இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வப்படுகிறார்கள் என தமிழா தமிழா பாண்டியன் கூறி இருக்கிறார்.

மேலும் ஜோதிகா ஒரு சமூக அக்கறை கொண்ட பெண். அதனால் தான் அவர் சில சமயங்களில் கூறும் கருத்துக்கள் சர்ச்சையாகவும் வெடிக்கிறது. மேலும் சமீபத்தில் அவர் தஞ்சை சென்ற பொழுது ஒரு மருத்துவமனை பற்றி கூறியதும், அது மிகப்பெரிய சரச்சையாக மாறியது என தமிழா தமிழா பாண்டியன் கூறி இருக்கிறார்.

To Top