சூர்யா ஜோதிகா விவாகரத்து சர்ச்சை!.. பதில் கொடுத்த ஜோதிகா!..

Surya and Jyothika: தமிழ் சினிமாவில் உள்ள காதல் ஜோடிகளில் சூர்யா ஜோதிகா முக்கியமானவர்கள். சூர்யாவும் ஜோதிகாவும் வெகு காலங்களாகவே ஒன்றாக நடித்து வந்தாலும் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின்போதுதான் அவர்கள் இருவருக்குமிடையே காதல் உண்டானது என கூறப்படுகிறது.

சூர்யாவின் வீட்டில் அவர் ஒரு நடிகையை திருமணம் செய்துக்கொள்வது அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் சூர்யா தனது காதல் மீது விடாப்பிடியாக இருந்ததால் வேறு வழியின்றி அவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிப்பதை விட்டுவிட்டார். அவ்வப்போது சில படங்களில் மட்டும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதிலும் திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி காட்சிகளை எல்லாம் நிராகரித்து வருகிறார் ஜோதிகா.

Social Media Bar

இந்த நிலையில் சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால் இருவரும் பிரிய போவதாகவும் பேச்சுக்கள் எழ துவங்கின. அதற்கு ஏற்றாற் போல மும்பையில் வீடு வாங்கி தனது பிள்ளைகளுடன் அங்கு சென்று இருக்கிறார் ஜோதிகா.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையே இதற்கு காரணம் என பேசப்படுகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜோதிகா பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது எனது அம்மா அப்பா இருவரும் மும்பையில் இருக்கின்றனர்.

கொரோனா சமயத்தில் அவர்கள் உடல் பாதிப்பால் பாதிக்கப்பட்டனர். அப்போது அவர்களை சென்று பார்த்துக்கொள்வது மிக கடினமாக இருந்தது. எனவேதான் முதற்கட்டமாக மும்பையில் வீடு வாங்கினோம். இப்போது அங்கு இருந்துக்கொண்டு எனது அம்மா அப்பாவை பார்த்துக்கொள்வது எனக்கு எளிமையாக இருக்கிறது என கூறியுள்ளார் ஜோதிகா.