News
மும்பை போனதும் ஆளே மாறியாச்சு!.. உள்ளாடை தெரிய புகைப்படம் விட்ட ஜோதிகா. ட்ரெண்டாகும் பிக்ஸ்!.
Jyothika: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகைகள் பலர் இன்று சினிமாவில் நடிப்பதை தவிர்த்து முற்றிலும் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்கள்.
பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும், தற்போது சில காரணங்களுக்காக சினிமாவை விட்டு விலகி இருக்கும் நடிகைகள் பல இருக்கிறார்கள். அந்த வகையில் 90-ஸ் கட்டத்தில் பெரும்பாலான ரசிகர்களுக்கு கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஜோதிகா.
இவரின் தற்போதைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.
நடிகை ஜோதிகா
தற்பொழுது 45 வயதாகும் நடிகை ஜோதிகா மீண்டும் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். நடிகை நக்மாவின் தங்கை என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜோதிகா. ஆனால் நக்மாவை விட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். அதில் விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினி சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் ஜோதிகா.

தமிழ் மொழி மட்டுமின்றி கன்னடம், தெலுங்குஇ மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார் ஜோதிகா. இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிப்பதிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கி இருந்தார் ஜோதிகா.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
அந்த வகையில் தமிழில் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த ஜோதிகாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு திரைப்பட விருதையும் பெற்றார்.
மும்பை சென்ற ஜோதிகா
கடந்த ஆண்டு இவரும், இவருடைய கணவர் மற்றும் குழந்தைகள் மும்பையில் செட்டில் ஆனார்கள். மேலும் அவர்களின் குழந்தைகளும் மும்பையில் படித்து வருவதால் பாலிவுட் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார் ஜோதிகா. அந்த வகையில் அவர் நடித்து வெளியான சைத்தான் திரைப்படம் நல்ல வசூலை கொடுத்தது. இதனால் பாலிவுட்டில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் தன்னுடைய உடலை கட்டுக்கோட்பாக வைத்துக் கொள்வதற்காக உடற்பயிற்சி போன்றவை செய்யும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
இந்நிலையில் அவர் மும்பையில் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர் மும்பை போனதும் மாடர்ன் உடைக்கு மாறிவிட்டார் எனவும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தற்பொழுது பகிர்ந்து உள்ள புகைப்படத்தில் பார்ப்பதற்கு அழகாகவும், மாடனாகவும் இருக்கும் ஜோதிகா அவரின் ரசிகர்களின் மத்தியில் தற்பொழுது பேசுபொருளாக உள்ளார்.
