jyothika sivakumar

Jyothika : சினிமாவை விட்டு செல்வதற்கு சிவக்குமார்தான் காரணமா!.. உண்மையை உடைத்த ஜோதிகா..

Cinema History News Tamil Cinema News

Actress Jyothika: தமிழ் சினிமாவில் பலரையும் கவர்ந்த நடிகைகளில் முக்கியமானவர் ஜோதிகா. மிக இளம் வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு வந்து கதாநாயகி ஆனார் ஜோதிகா. அப்போதைய காலக்கட்டங்களில் மும்பையில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தது.

சிம்ரன், குஷ்பு என அந்த வகையில் தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றவர்தான் நடிகை ஜோதிகா. ஜோதிகாவிற்கு வந்தவுடனேயே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அவர் தொடர்ந்து முக்கிய கதாநாயகர்களான சூர்யா,அஜித்,விஜய் என பலருடனும் சேர்ந்து நடித்துள்ளார்.

ஜோதிகா நடித்த திரைப்படங்களில் குஷி ஒரு முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு நடிகர் சூர்யாவுடன் காதல் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணம் செய்துக்கொண்ட பிறகு ஜோதிகா அதிகமாக நடிப்பதை கைவிட்டார்.

எப்போதாவது சில படங்களில் மட்டும் நடித்து வந்தார். நடிகர் சிவக்குமாருக்கு தனது மகன் ஒரு நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டதில் விருப்பம் இருக்கவில்லை. அதனால்தான் அவர் இனி அவர் நடிக்க கூடாது என ஜோதிகாவிற்கு விதிமுறை போட்டிருக்கிறார் அதனால்தான் ஜோதிகா சினிமாவில் நடிக்கவில்லை என்று கூறி வந்தனர் மக்கள்.

இதுக்குறித்து ஜோதிகாவிடம் ஒரு பேட்டியில் கேட்டப்பொழுது அவர்களது கூறுவதில் துளி அளவும் உண்மை இல்லை. நான் இப்போது படங்கள் நடிக்கப்போதும் கூட எனக்கு முழுக்க முழுக்க ஆதரவு அளிப்பது என் மாமா சிவக்குமார்தான், நான் படப்பிடிப்பிற்கு கிளம்பும்போதே வீட்டை பற்றி யோசிக்காமல் நல்லப்படியாக நடித்துவிட்டு வா என அறிவுரை கூறுவார் என் மாமா.

அதே போல நான் நடிக்கும் படத்தின் அப்டேட் என்ன என்று தொடர்ந்து அவர் என்னிடம் கேட்டுள்ளார் என்று கூறியுள்ளார் ஜோதிகா.