News
வாய்ல அடிச்சிக்கோ அப்படியெல்லாம் சொல்லவே கூடாது!.. ரஜினியின் கனவை மாற்றி அமைத்த பாலச்சந்தர்!..
Rajinikanth and Balachandar: தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக ரஜினி வந்த பொழுது பெரிதாக சினிமா குறித்து எந்த ஒரு கனவும் இல்லாமல்தான் வந்தார் என கூறலாம். கர்நாடகாவில் உள்ள நடிப்புக்கான பயிற்சி பள்ளியில் பயின்று வந்த பொழுது பாலச்சந்தரிடம் பழக்கம் ஏற்பட்டதன் காரணமாகத்தான் ரஜினிகாந்த் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு வந்தார்.
தமிழ் சினிமாவிற்கு நடிக்க வரும் பொழுது ரஜினிக்கு தமிழில் பேச தெரியாது. இதனால் தொடர்ந்து தமிழில் ஒரு நடிகராக நீடிக்க முடியாது என்று நினைத்து வந்தார் ரஜினிகாந்த்.
ஆனால் ரஜினிகாந்திடம் ஒரு சிறப்பான நடிப்பு திறமை இருப்பதை அப்பொழுது அறிந்திருந்தார் பாலச்சந்தர். இதனால் இவரை எப்படியாவது தமிழில் ஒரு பெரிய நடிகராக்க வேண்டும் என்பது பாலச்சந்தரின் ஆசையாக இருந்தது.
வில்லன் கதாபாத்திரம்:
இந்த நிலையில் சினிமாவிற்கு வந்த உடனேயே முதலில் வில்லனாக நடிப்பதற்குதான் ரஜினிகாந்திற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது கமல்ஹாசன் பெரிய கதாநாயகனாக இருந்தார் எப்படியும் கமல்ஹாசன் அளவிற்கு தன்னால் பெரிய ஆளாக முடியாது என்று அப்பொழுது நினைத்து இருந்தார் ரஜினிகாந்த்.

எனவே இந்த வில்லன் வில்லனாக நடிப்பதையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடிக்க வேண்டும் என்பது ரஜினிகாந்தின் ஆசையாக இருந்தது அப்பொழுதுதான் பாலச்சந்தர் அவருக்கு ரஜினிகாந்த் என்கிற பெயரை வைத்தார்.
தொடர்ந்து இனி நான் வில்லனாக நடிக்க என்னை ஆசீர்வதியுங்கள் என்று பாலச்சந்தரிடம் கூறியிருக்கிறார் ரஜினிகாந்த். அதற்கு பதில் அளித்த பாலச்சந்தர் யார் இப்பொழுது நீ வில்லனாகவே நடிக்க போகிறாய் என்று கூறியது என்று கூறி சிரித்திருக்கிறார். அதன் பிறகுதான் பாலச்சந்தர் ரஜினிகாந்த்திற்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து அதன்பிறகு கதாநாயகனாக நடிக்க துவங்கிய ரஜினிகாந்த் கமலுக்கு இணையான ஒரு இடத்தை பிடித்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இருந்தாலும் வில்லனாக நடிக்க வந்த ரஜினிகாந்தை கதாநாயகனாக மாற்றிய பாலச்சந்தர்தான் ரஜினியின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நபராக இருக்கிறார்.
