Connect with us

Kaaduvetti திரை விமர்சனம்: ஆர்.கே. சுரேஷின் காடுவெட்டி படம் எப்படி இருக்கு…

kaaduvetti movie

Movie Reviews

Kaaduvetti திரை விமர்சனம்: ஆர்.கே. சுரேஷின் காடுவெட்டி படம் எப்படி இருக்கு…

Social Media Bar

இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் நடிகர் ஆர்.கே. சுரேஷின் நடிப்பில் உருவான காடுவெட்டி திரைப்படம் பல சர்ச்சைகளை உருவாக்கியது. இந்த படத்தை வெளியிடுவதற்கு பல பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில், இன்று இந்த காடுவெட்டி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

காடுவெட்டி திரைப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் தவிர,  சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாமக கட்சியின் ஒரு முக்கிய பிரமுகராக இருந்த காடுவெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த காடுவெட்டி திரைப்படம். ஜாதி ரீதியான படம் இல்லை என ஆர்கே சுரேஷ் இதற்கு  முன்பே  கூறியிருந்தாலும், அவர் பேச்சில் மட்டும் தான் அது இருபது போல் தெரிகிறது. இந்த படத்தை இவங்க அவங்க தான் பாகனும் னு இல்லை , யார் வேணும்னாலும் பக்கலாம் னு பொத்தாம் பொதுவா வேணும்னா சொல்லலாம். பாக்குற  சில பேர்க்கு இந்த படம் எரிச்சல் ஊட்ட வாய்ப்பு அதிகம். கிட்டத்தட்ட ரஞ்சித் படம் பாக்குற ஒரு பீல் அ இந்த படம் குடுக்கும். ஆனா, ஒரு வரலாற பாக்குற விதமா இந்த படத்த பாத்து தெரிஞ்சுக்கலாம். 

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம், ஜி. ராமு, சோலை ஆறுமுகம் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைக்க, வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசையமைக்க,  பாடல்கள் அருமையாக இருந்தாலும், அடிக்கடி வந்து போவதால் சற்று அதிருப்தியையும்  ஏற்படுத்துகிறது. 

kaadu vetti
kaadu vetti

காடுவெட்டி, இந்த டைட்டிலேயே பயன்படுத்தக் கூடாது என சென்சார் போர்டு தடை விதித்தது. அதற்கு, அந்த காலத்தில் மன்னர்கள் போர் பயிற்சிக்காகக் காட்டில் ஓரு இடத்தை தேர்வு செய்து மரங்களை வெட்டி பயிற்சிக் களமாகபயன்படுத்துவார்கள். அதை போர்க்குடி மக்கள் விவசாய நிலமாக மாற்றுவார்கள். பிறகு அதைஊர்களாக மாற்றுவார்கள். அப்போதுஅதற்கு காடுவெட்டி என்று பெயர் வைப்பார்கள் என விளக்கம் கொடுத்து போராடி இந்த பெயரை வாங்கினார்கள். ஆனால் எதற்கு என்று படம் பார்த்தும் விளங்க வில்லை. 

காதல் என்ற காரணத்துக்காக எல்லோரையும் ஒழிக்க நினைத்தால் அது தலைமுறை தலைமுறையாக வன்முறையை சேர்க்கும் ங்கற கருத்த மையமா வச்சு இந்த படத்த எடுதுருக்கங்கலாம். மொத்ததுல இந்த படம் வட மாவட்ட மக்களின் வாழ்வியல் மற்றும் அரசியல பத்தி பேச கூடிய ஒரு படம். விரைவில் ott க்கு தள்ளப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. 

To Top