News
காண்டாகி கத்திய காஜல் அகர்வால்! பொது நிகழ்ச்சியில் அந்த ரசிகர் செய்தது என்ன?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித், விஜய், சூர்யா, காத்தி, தனுஷ் என கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நடிகையாக வளம் வருபவர் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பின்னும் தொடர்ச்சியாக நடித்து கொண்டிருக்கிறார்.
‘பழனி’ என்ற படம் மூலமாக நடிகையாக அறிமுகமான காஜல் அகர்வாலுக்கு தெலுங்கில் வெளியான ‘மகதீரா’ படம் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. தமிழிலும் இப்படம் ‘மாவீரன்’ என்ற பெயரில் வெளியானது. அதில் ராணியாக நடித்த இவர், அதற்க்கு பின் தமிழ் சினிமாவின் ராணியாக வளம் வந்து வருகிறார்.
அந்த படத்திற்கு பின்னர், பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் கமிட்டாகி பிசியான நடிகையாக மாறினார் காஜல் அகர்வால். இவர் தற்போது கமலின் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ரிலீசுக்காக நீண்ட காலமாக காத்திருப்பில் இருக்கிறார் காஜல் அகர்வால்.

இந்த நிலையில், சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார் காஜல் அகர்வால். அப்போது செல்பி எடுப்பதற்காக வந்த ஒருவர், அவரின் இடுப்பில் கை வைத்துள்ளார். இதனால் கடுப்பான காஜல் அகர்வால் என்ன இதெல்லாம் என கோபப்பட்ட, அவரை பாக்ஸர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
