Cinema History
திருமண விழாவில் கருணாநிதி சொன்ன அந்த ஒரு வார்த்தை… ஆச்சரியமடைந்த எம்.ஜி.ஆர்!..
Karunanithi and MGR : திரைத்துறையிலும் சரி, அரசியலிலும் சரி தமிழக வரலாற்றில் மிகப்பெரும் சாதனைகளை செய்தவர்கள்தான் எம்.ஜி.ஆரும், கலைஞர் மு கருணாநிதியும். கலைஞரும் எம்.ஜி.ஆரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தான் திரை உலக பயணத்தை தொடங்கினார்கள்.
ராஜகுமாரி என்ற படத்தில் மூலம்தான் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்கள். ஆனால் அப்போது அவர்களுக்கே தெரியாது இந்த தமிழகத்தை நாம் ஒரு காலத்தில் ஆழ்வோம் என்று, அதே போல யாரும் எதிர்பார்க்காத ஒரு பெரிய ஆளுமையாக இருவரும் உருவெடுத்தார்கள்.
இருவருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்தார்கள். எம்.ஜி.ஆர் படங்களுக்கு ஒரு பெரும் கூட்டம் இருந்தது என்றால் அதே சமயம் புரட்சிகரமாக கலைஞர் வசனத்திற்கு ஒரு கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர் மீது கலைஞர் எந்த அளவுக்கு பாசம் வைத்தார் என்பதை விளக்கும் சம்பவம் ஒன்று நடந்தது.
எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி இல்லத் திருமணத்திற்கு அரசியல் பெரும்புள்ளிகளில் இருந்து பிரபலங்கள் வரைக்கும் அனைவரும் கலந்து கொண்டார்கள். அப்பொழுது மணமக்களை வாழ்த்த வந்த கலைஞருக்கு எப்படி இவர்களை வாழ்த்துவது என்று தெரியவில்லை.
நகமும் சதையும் போல் என்று சொன்னால் சதையை விட்டு நகம் வளர்ந்து நிற்கும். அதனால் அதை சொல்லுவது இயலாது. மலரும் மனமும் போல் என்று சொன்னால் இப்போதுள்ள மலர்கள் மணமாகவே வருவதில்லை. எனவே உடனே எம்.ஜி.ஆரும் அவருடைய புகழும் போல் நீங்கள் வாழ வேண்டும் என்று சொன்னாராம் கலைஞர். அந்த அளவிற்கு இருவரும் நட்புடன் இருந்துள்ளனர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்