News
எதிர்நீச்சல் எண்டு கார்டால் கவலையில் இருக்கும் இயக்குனர்!. கை கொடுத்த கலைஞர் டிவி. அடுத்த எதிர்நீச்சலுக்கு தயாராகுங்க மக்களே.
சன் டிவியில் வெளியான வேகத்திற்கு அதிக பிரபலமான தொடர்தான் எதிர்நீச்சல். ஜனனி என்கிற பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சிக்கல்களை அடிப்படையாக கொண்டுதான் இந்த தொடர் தொடர்ந்து செயல்பட்டு கொண்டுள்ளது.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரம் இருந்து வருகிறது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து காலமானார்.

அதனை தொடர்ந்து ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிகர் வேலராம மூர்த்தி நடிக்க துவங்கினார். வேலராம மூர்த்தி நடிக்க துவங்கியப்போது முதலில் பலருக்கும் அதுக்குறித்து ஆர்வம் இருந்தது.
நாடகத்தில் மாற்றம்:
ஆனால் அவர் நடிக்க துவங்கியது முதலே அந்த கதாபாத்திரமே மாறிவிட்டது. இதனால் பலரும் அந்த சிரீயல் மீது அதிருப்தியை எழுப்பு வந்தனர். இந்த நிலையில் சீரியலின் இயக்குனரான திருச்செல்வம் ஏற்கனவே இந்த சீரியலுக்காக 5 வருட கதையை எழுதி வைத்திருந்தார்.
ஆனால் சன் டிவி நாடகத்தின் கதையை கண்டிப்பாக மாற்ற வேண்டும் என கூறிவிட்டனர். இதனையடுத்து பாதியிலேயே எதிர்நீச்சல் கதையை முடித்துக்கொள்ள திட்டமிட்டார் திருச்செல்வம்.

அதிருப்தியில் இயக்குனர்:
அதே சமயம் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கலைஞர் டிவி தற்சமயம் எதிர்நீச்சலை தங்களது சேனலில் தொடர்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சக்தி கதாபாத்திரத்தை முக்கிய கதாபாத்திரமாக வைத்து எதிர்நீச்சல் 2 சீரியலை துவங்க முடிவெடுத்துள்ளார் இயக்குனர் திருச்செல்வம் என கூறப்படுகிறது.
