இப்படி பண்ணுனா அந்த விக்ரம் படம் ஓடாது!.. தயாரிப்பாளர் வார்னிங்கை கண்டு கொள்ளாததால் அடி வாங்கிய இயக்குனர்!.. தேவையா இது?

தமிழ் திரையுலகில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் சிலர் ஒரு திரைப்படத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை உடனே கண்டுப்பிடித்துவிடுவார்கள். அந்த வகையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும் சினிமாவில் மிக முக்கியமானவர்.

இயக்குன சுசி கணேசன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு இயக்கத்தில் அந்த சமயத்தில் உருவான திரைப்படம் கந்தசாமி. அந்த திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். அதற்கு முன்பு சுசி கணேசன் இயக்கியிருந்த திருட்டு பயலே திரைப்படம் கொஞ்சம் வரவேற்பை பெற்றிருந்தது.

ஏன் கந்தசாமி திரைப்படம் தோல்வியை தழுவியது என்பது குறித்து கலைப்புலி எஸ்.தாணுவிடம் கேட்கும்போது “அந்த படம் வெற்றியை கொடுத்திருக்க வேண்டிய திரைப்படம்தான். ஏனெனில் வித்தியாசமான கதையை அது கொண்டிருந்தது.

Social Media Bar

ஆனால் மொத்தமாக மூன்று மணி நேரம் 10 நிமிடங்கள் இருந்தது அந்த படம். எனவே நான் இயக்குனரிடம் அதை குறைக்கும்படி கூறினேன். ஒருவன் வீட்டில் இருந்து கிளம்புவது முதல் படம் பார்த்து செல்வது வரை சேர்த்து பார்த்தால் மொத்தமாக அவனுக்கு 5 மணி நேரம் செலவாகிவிடும்.

படம் அதிக நேரம் இருப்பதாக பேச்சுக்கள் இருந்தாலே அது படத்தை பாதித்துவிடும் எனவே அரை மணி நேரத்தை குறைத்துவிடுங்கள் என கூறினேன். ஆனால் இயக்குனர் கேட்கவில்லை. அதே போலவே இறுதியில் படம் அதிக நேரம் இருப்பதுதான் அதன் தோல்விக்கு காரணமானது என்கிறார் கலைப்புலி எஸ் தாணு.