
இந்திய சினிமாவின் பேன் இந்தியா ஸ்டாராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலிக்கு பிறகு இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் பிரம்மாண்ட பட்ஜெட் கொண்டதாக இருந்து வருகிறது. ஆனால் அதில் எல்லா படங்களும் பெரும் ஹிட் அடிக்கவில்லை. இந்த நிலையில்தான் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளியாகியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் தற்போது பெரும் கவனம் பெற்றுள்ளது.
இந்த படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படம் வெளியாகி தற்போது 10 நாட்களை தாண்டிவிட்ட நிலையில் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. இதுவரை இந்த படம் மொத்தமாக ரூ.805 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.36 கோடி வசூல் செய்துள்ளதாம். இன்னும் சில நாட்களில் ரூ.1000 கோடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கிறார்கள் படக்குழுவினர்.
நீண்ட காலம் கழித்து பிரபாஸின் படம் ரூ.1000 கோடியை தொட உள்ளதால் பிரபாஸ் ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.






