Connect with us

கல்கி படத்தில் அமிதாப்பச்சன் (அசுவத்தாமன்) மாஸ் ப்ளாஸ்பேக்!.. பிரபாஸே ஓரம் போகணும் போல!..

Ashwatthama1

News

கல்கி படத்தில் அமிதாப்பச்சன் (அசுவத்தாமன்) மாஸ் ப்ளாஸ்பேக்!.. பிரபாஸே ஓரம் போகணும் போல!..

Social Media Bar

சலார் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் கல்கி 2898 ஏ.டி இந்த திரைப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். அதில் நேற்று அமிதாப்பச்சனுக்கு மாஸ் கொடுக்கும் விதத்தில் ஒரு வீடியோ வெளியாகி இருந்தது.

விஷ்ணு கடவுளின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தை பின்புலமாக கொண்டு இந்த கதை நகர இருக்கிறது. இதில் அமிதாப்பச்சன் நடிக்கும் அசுவத்தாமன் கதாபாத்திரம் மகாபாரத கதையிலேயே மிகவும் சக்தி வாய்ந்த கதாபாத்திரமாகும்.

அசுவத்தாமன்:

அசுவத்தாமன் கௌரவர்களின் ராஜக்குருவான துரோணாச்சாரியாரின் மகன் ஆவார். சிறு வயதிலேயே வேதம் மற்றும் போர்க்கலை இரண்டிலும் சிறந்து விளங்கியவர் அசுவத்தாமன். சிறு வயது முதலே இவர் துரியோதனின் உயிர் நண்பனாக இருந்து வந்தார்.

கர்ணன் துரியோதனின் நட்பை பற்றி அறிந்த பலருக்கு அசுவத்தாமன் துரியோதனின் நட்பு பற்றி தெரியாது. மகாபாராத போர் வரை நேர்மை தவறாமல் இருந்து வந்த அசுவத்தாமன் மகாபாரத போரில் நடக்கும் சில செயல்களால் தீமைகளை செய்கிறார்.

மகாபாராத போரில் பாண்டவர்களால் துரோணாச்சாரியாரை நேருக்கு நேர் கொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அவரை மன ரீதியாக உடைப்பதற்காக தருமனிடம் கூறி அசுவத்தாமன் இறந்துவிட்டதாக கூற சொல்கின்றனர்.

ஏனெனில் தருமன் பொய்யே கூறாதவன். இதனால் அவன் பொய் சொல்ல மறுக்கிறான். இந்த நிலையில் அசுவத்தாமன் என்கிற பெயர் கொண்ட யானையை கொல்கின்றனர். அதனை வைத்து அசுவத்தாமன் இறந்துவிட்டதாக தருமன் கூறுகிறான்.

அதை கேட்டு துரோணாச்சாரியார் திகிலடைந்த நேரத்தில் அவரை கொல்கின்றனர் பாண்டவர்கள். அதே போல வஞ்சக முறையிலேயே துரியோதனனையும் பீமன் கொல்கின்றான்.

தனது நண்பன் மற்றும் தந்தை இருவரும் வஞ்சகமாக கொலை செய்யப்பட்டதை அறிந்த அசுவத்தாமன் இதுவரை யாரும் உபயோகிக்காத ஒரு அஸ்திரத்தை பயன்படுத்தி வானில் ஏவுகிறான் அசுவத்தாமன்.

அதன் பலனாக அன்றே பாண்டவர் குலத்தில் உள்ள அத்தனை ஆண் வாரிசுகளும் இறக்கின்றன. இதனால் கோபமடைந்த திரௌபதி சாவே இல்லாத வாழ்க்கையை அவருக்கு சாபமாக அளிக்கிறார். அதே சமயம் தனிமையிலேயே அவரது வாழ்க்கை கழியும் என்றும் கூறுகிறார்.

ஆசீர்கார் கோட்டைக்கு அருகில் உள்ள ஜபல்பூர் குடிமக்கள் இப்போதும் அங்குள்ள காடுகளில் அசுவத்தாமன் அலைந்து திரிந்து வருவதாக நம்புகின்றனர். அவரது நெற்றியில் இருந்த மணியை பிய்த்த காரணத்தால் தொடர்ந்து அவருக்கு ரத்தம் வழிந்து வருவதாகவும் அதை நிறுத்த எண்ணெயும் மஞ்சளும் அவர் கேட்பதாகவும் அந்த மக்கள் நம்புகின்றனர். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில்தான் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top