News
ராக்கி பாயையே தாண்ட முடியலையா..! கல்கி 2898 ஏடி முதல் நாள் வசூல் நிலவரம்!.
ஹாலிவுட் தரத்தில் தயாரிக்கப்பட்டு நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கல்கி 2898 ஏ.டி இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்திருந்தார்.
மேலும் பாலிவுட் சினிமா வட்டாரத்தை சேர்ந்த பல பிரபலங்கள் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அமிதாப்பச்சன் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மகாபாரத கதை:
மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படம்தான் கல்கி என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் அதிக போட்டி காரணமாக எடுக்கப்பட்ட பாலிவுட் திரைப்படம் ஆகும்.
பேன் இந்தியா திரைப்படமாக இதை வெளியிடுவதற்காக அனைத்து மொழிகளிலும் உள்ள பிரபலமான நடிகர்களை படத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த திரைப்படம் புக்கிங் ஆகும்பொழுது இணையத்தில் சர்வர் ஸ்லோ ஆகும் அளவிற்கு புக்கிங் ஆனது.

அதனை தொடர்ந்து படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று வெளியான கல்கி திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெற்று இருக்கிறது என்று கூற வேண்டும். கல்கி திரைப்படம் இந்தியாவில் மட்டும் 95 கோடி வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
வசூல் நிலவரம்:
ஹிந்தியில் மட்டும் 22 லிருந்து 23 கோடி வசூல் செய்திருக்கிறது. ஹிந்தியை விட மற்ற மொழியில் தான் அதற்கான வசூல் சாதனை கொஞ்சம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது இல்லாமல் வெளிநாடுகளில் 20 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது கல்கி திரைப்படம்.

தொடர்ந்து மொத்தமாக நேற்று மட்டும் 115 கோடிக்கு ஓடியுள்ளது கல்கி. ஆனால் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் கல்கி திரைப்படத்தை விடவும் அதிக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. கே ஜி எஃப் 2 முதல் நாள் மட்டுமே 150 கோடி வசூல் செய்தது.
மேலும் கேஜிஎப் 2 திரைப்படத்தை விடவும் கல்கி திரைப்படத்தின் தயாரிப்பு செலவு மிகவும் அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 750 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படம் முதல் நாள் 150 கோடி தான் வசூல் செய்கிறது என்பது குறைவான வசூல்தான்.
இந்த திரைப்படம் ஆயிரம் கோடிக்கு ஓடினால்தான் சிறிதளவு லாபமாவது தயாரிப்பாளருக்கு கிடைக்கும் என்கிற நிலை இருக்கிறது.
