Latest News
கல்கி 2898 ஏடி தியேட்டர்ல போய் பார்க்கலாமா? இல்ல வீட்லையே இருக்கலாமா.. பட விமர்சனம்!..
இன்று நடிகர் பிரபாஸ் நடிப்பில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் கல்கி 2898 ஏடி படத்தின் கதை முழுக்க முழுக்க ஒரு பேண்டஸி கதை என்றாலும் இந்து மதத்தின் புராணமான மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு பாடத்தின் கதைகளும் அமைக்கப்பட்டிருப்பது எமோஷனலாக மக்கள் மத்தியில் கனெக்ட் செய்வதற்கான ஒரு விஷயமாக இருந்து வருகிறது.
பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்கள் பிரபாஸிற்கு தோல்வியை கொடுத்த நிலையில் தற்சமயம் சலார் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து இந்த படமும் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் கதைப்படி கலியுகத்தின் முடிவில் பகவானின் அவதாரமான கல்கி அவதாரம் தோன்றும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் மகாபாரத போருக்கு பிறகு கிருஷ்ணன் இறக்கிறார். கிருஷ்ணனுக்கு அடுத்த அவதாரம் தான் கல்கி அவதாரம்.
கல்கி அவதாரம்:
இந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் கல்கி அவதாரத்திற்காக மகாபாரத காலத்தில் இருந்தே காத்திருக்கிறார் அஸ்வத்தாமன். துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமனுக்கு காந்தாரியால் ஒரு சாபம் கிடைக்கிறது. அது என்னவென்றால் சாகா வரம் என்பதே அந்த சாபம்.
அந்த சாபத்தை நீக்கும் வல்லமை கொண்ட ஒரே ஆள் கல்கி அவதாரம் மட்டுமே. எனவே கலியுகத்தின் முடிவுக்காகவும் கல்கி அவதாரத்தின் தோன்றலுக்காகவும் அஸ்வத்தாமனான அமிதாப் பச்சன் காத்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் கல்கி அவதாரம் தீபிகா படுகோனே வயிற்றில் உருவாகிறது. உலகமே அழியும் தருவாய்க்கு வந்து பல நகரங்கள் அழிந்து கடைசியாக காசி நகரம் மட்டுமே இருந்து வரும் நிலையில் கல்கி அவதாரம் மறு உலகத்தை உருவாக்குவதற்கான ஒரு விஷயமாக உருவாகிறது.
வில்லனாக ஹீரோ:
இந்த நிலையில் சில தீய மனிதர்கள் இந்த கல்கி அவதாரம் உருவாகக்கூடாது என்று நினைக்கின்றனர். அதற்காக தீபிகா படுகோனேவை அவர்கள் பிடிக்க நினைக்கின்றனர். இந்த நிலையில் காசுக்காக வேலை செய்யும் அடியாட்களுக்கு அதிக பணம் தருவதாகவும் அதற்கு பதிலாக தீபிகா படுகோனேவை பிடித்து தரும்படியும் கூறுகின்றனர்.
அந்த அடியாட்கள் கூட்டத்தில் நடிகர் பிரபாஸும் ஒருவராக இருக்கிறார் இந்த நிலையில் காசுக்காக அவர் தீபிகா படுகோனேவை தூக்க செல்கிறார் அப்பொழுது இவருக்கும் அமிதாப்பச்சனுக்கும் இடையே சண்டை நடைபெறுகிறது.
ஆரம்பத்தில் வில்லனாக பிரபாஸ் இருந்தாலும் போக போக கல்கி அவதாரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள துவங்குகிறார் அதற்கு பிறகு அமிதாப்பச்சன் தீபிகா படுகோனே பிரபாஸ் 3 பேரும் ஒரு அணியாக உருவாகின்றனர்.
தொடர்ந்து கல்கி அவதாரத்திற்காக காத்திருக்கும் பலரும் இந்த அணியில் வந்து சேருகின்றனர். கல்கி அவதாரத்தை காப்பாற்றுவது தான் படத்தின் கதையாக இருக்கிறது.
படத்தில் உள்ள பெரிய மைனஸ் என்று பார்த்தால் படத்தின் நேரம் 3 மணி நேரம் இந்த திரைப்படம் இருக்கிறது. இது பலருக்கும் அயற்சியை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. மேலும் முதல் பாதி மிகவும் பொறுமையாக செல்கிறது.
இரண்டாம் பாதியில்தான் படத்தின் கதையே துவங்குகிறது. முதல் பாதியில் வெறுமனே நேரத்தை கடத்த வேண்டும் என்பதற்காக படத்தை ஓட்டுவது போல தெரிகிறது. ஆனால் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருப்பதால் இந்த திரைப்படம் திரையரங்குகளில் சென்று பார்ப்பதற்கு உகந்த படம் தான் என்று கூறப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்