Connect with us

தமிழ் சினிமா ட்ரெண்ட் இப்படி மாறி போனதுக்கு கமல்,ரஜினிதான் காரணம்!.. இப்படி பண்ணிட்டீங்களேப்பா..

Cinema History

தமிழ் சினிமா ட்ரெண்ட் இப்படி மாறி போனதுக்கு கமல்,ரஜினிதான் காரணம்!.. இப்படி பண்ணிட்டீங்களேப்பா..

Social Media Bar

விஜயகாந்த், சத்யராஜ் போன்ற நடிகர்கள் நடித்து வந்த காலக்கட்டங்களில் தமிழ் சினிமா மிக சிறப்பாக இருந்தது என கூறலாம். எல்லா வகையான கதைகளும் அப்போது திரைப்படங்களாக வந்தன. வெறும் ஆக்‌ஷன் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் குடும்ப கதைகள், காமெடி படங்கள் என பல வகை படங்கள் வந்தன.

இதனால் நடிகர்கள் பல வித கதாபாத்திரங்களில் நடித்தனர். உதாரணமாக நடிகர் சத்யராஜ் வில்லன், கதாநாயகன், காமெடி கதாபாத்திரம் என பல வகைகளில் நடித்துள்ளார். கமல், ரஜினி கூட அப்படி மாறுப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ஆனால் தற்சமயம் தொடர்ந்து தமிழ் சினிமா கவலைக்கிடமான இடத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. பெரிய ஹீரோக்கள் பெரும்பாலும் ரத்த காட்சிகள் அதிகம் உள்ளது போன்ற ஆக்‌ஷன் திரைப்படங்களிலேயே நடிக்கின்றனர். மக்களும் இதனை விரும்ப துவங்கியுள்ளனர்.

இதனாலேயே அதிக ஆக்‌ஷன் காட்சிகள் கொண்ட ஜெயிலர், விக்ரம் மாதிரியான திரைப்படங்கள் பெரும் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் கொடுத்துள்ளன. இதனால் இனி துப்பாக்கிகளும், இரத்த காட்சிகளும் அதிகம் இருந்தால் படம் வெற்றியடையும் என்கிற நம்பிக்கை சினிமா துறை மத்தியில் நிலவியுள்ளது.

எனவே இனி தமிழ் சினிமாவில் தெலுங்கு படம் மாதிரியான படங்கள்தான் வருமோ என்கிற பயம் உருவாகியுள்ளது. இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணமாக ரஜினி மற்றும் கமல் நடித்த விக்ரம் மற்றும் ஜெயிலர் படத்தையே திரை விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top