News
65 வருஷமா இதைதான் பண்ணீட்டு இருந்துங்கீளா!.. கசமுசா வீடியோ வெளியிட்ட கமல்ஹாசன்!..
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். 70 வயதை நிறைவு செய்ய உள்ள நிலையில், தற்போது முன்னணி நடிகராக பல படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
பன்முகங்களைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன் சினிமாவிற்காக பல பணிகளை செய்திருக்கிறார். மேலும் பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கமல் சினிமாவில் 65 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதனை பலரும் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் கமல் சினிமாவிற்கு வந்து 65 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒரு வீடியோவாக யூடியூபில் வெளியிட்டு இருக்கிறார். அது தற்பொழுது வைரலாகி பலராலும் கமெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் கமல்
கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். 4 தேசிய விருதுகள் உட்பட, தமிழக அரசின் திரைப்பட விருதுகள், ஆந்திரா அரசின் நந்தி விருது, ஃபிலிம் ஃபேர் விருது, பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.
மேலும் இவர் நடிகராக மட்டுமல்லாமல் திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், நடன அமைப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவராக தமிழ் சினிமாவில் விளங்கி வருகிறார்.

சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கமல்ஹாசன் பல வித்தியாசமான நடிப்புகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் உலகநாயகன் என்ற பெயருடன் தற்பொழுதும் நிலைத்து நிற்கிறார். தற்போது வரை கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வருவதுஎன்பது மிகப்பெரிய சாதனையாகும்.
தற்போது சினிமாவில் இவர் 65 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் நிலையில் பலரும் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் கமலை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
சினிமாவில் இவர் எத்தனையோ நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து இருக்கிறார். படங்களில் பல வேடங்களை அணிந்து சினிமாவில் சமூக கருத்துகளை மக்களிடையே கொண்டு சேர்த்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் சினிமாவிற்கு வந்து 65 ஆண்டுகள் நிறைவடைந்ததை பலரும் கொண்டாடி வருகின்றனர். மணிரத்தினம் இதற்காக ஒரு விழாவை எடுத்து இருக்கிறார். இந்நிலையில் 65 ஆண்டுகளில் எவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய படங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு விருமாண்டி, விஸ்வரூபம் 2 ஹே ராம் மாதிரியான திரைப்படங்களில் நடித்த கவர்ச்சி காட்சிகளை தனது youtube சேனலில் பதிவிட்டு உள்ளார் கமல். இதை பார்த்த நெட்டிசன்கள் கமலை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
