Connect with us

அய்யைய்யோ அந்த இயக்குனர் கூட எல்லாம் நடிக்க முடியாது!.. ரஜினியை காப்பாற்றி விட கமல்ஹாசன் சொன்ன ட்ரிக்!..

rajinikanth kamal

Cinema History

அய்யைய்யோ அந்த இயக்குனர் கூட எல்லாம் நடிக்க முடியாது!.. ரஜினியை காப்பாற்றி விட கமல்ஹாசன் சொன்ன ட்ரிக்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையே போட்டி என்பது எப்போதுமே இருந்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயமாகும். எம்.ஜி.ஆர், சிவாஜியில் துவங்கி தற்சமயம் விஜய், அஜித் வரை இந்த போட்டி என்று ஓயாமல் சென்று கொண்டுள்ளது இந்த போட்டி. ஆனால் ரஜினி கமல் காலக்கட்டத்தில் இந்த போட்டி கொஞ்சம் ஆரோக்கியமாக இருந்தது.

என்னதான் ரசிகர்கள் மத்தியில் சண்டை போட்டுக்கொண்டாலும் ரஜினியும் கமலும் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். கமலை வைத்து நாயகன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கினார். அப்போது பெரிதாக வெற்றியை பெறாவிட்டாலும் கூட வெகுவாக பேசப்பட்டது நாயகன் திரைப்படம்.

அதனை அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் மணிரத்தினம் இயக்கிய திரைப்படம் தளபதி. தளபதி திரைப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்தை வைத்து செய்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம். மணிரத்தினத்தை பொறுத்தவரை அவருக்கு பிடித்த மாதிரி காட்சிகள் வரும் வரை ஹீரோவை ஒரு வழி செய்துவிடுவார்.

rajini kamal
rajini kamal

இப்படி ரஜினியை வைத்து ஒரு காட்சியை 15 தடவை எடுத்திருக்கிறார் மணிரத்தினம். இந்த நிலையில் கவலையாக வந்த ரஜினிகாந்த், கமல்ஹாசனிடம் வந்து எப்படி இவர் படத்தில் நடித்தீர்கள் எனக்கு கஷ்டமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

அதனை கேட்ட கமல்ஹாசன் ரஜினிகாந்திற்கு ஒரு யோசனை கொடுத்துள்ளார். மணிரத்தினம் உங்களிடம் காட்சியை கூறும்போது அதை அவரை நடித்து காட்ட சொல்லுங்கள். அவர் நடித்து காட்டிய பிறகு சிறிது நேரம் அந்த காட்சியை பற்றி யோசிப்பது போல முகத்தை வைத்துக்கொண்டு இருங்கள். பிறகு அந்த காட்சியில் நடியுங்கள் அவர் ஓ.கே சொல்லிவிடுவார் என கூறியிருக்கிறார். அதே போலவே மணிரத்தனத்தை இருவரும் ஏமாற்றி உள்ளனர்.

To Top