Connect with us

ஆல்பம் வெளியான பிறகு கமல் சார் என்கிட்ட பேசல!.. ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ்!..

lokesh kamal

News

ஆல்பம் வெளியான பிறகு கமல் சார் என்கிட்ட பேசல!.. ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ்!..

Social Media Bar

ஒரு காதல் ஆல்பம் பாடலில் நடித்ததன் மூலமாக கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் அதிக பிரபலமாகி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதற்கு முன்பு மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் நடித்திருப்பார்.

அவருக்கு நடிப்பின் மீது கொஞ்சம் ஆர்வம் உண்டு என்றும் கூறலாம். ஆனால் தமிழ் சினிமாவிற்கு வந்தபோது இயக்குனராக நிறைய திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. அதிகபட்சம் 10 படங்கள் இயக்கினால் போதும் என்பதுதான் திரைத்துறைக்கு வந்த போது அவரின் ஆசையாக இருந்தது.

ஆனால் அவருக்கு அதிகரித்து வரும் வரவேற்பின் காரணமாக தற்சமயம் அதிலிருந்து விலகி நிறைய திரைப்படங்களை இயக்க இருக்கிறார். இந்த நிலையில் சுருதிஹாசனுடன் சேர்ந்து இவர் நடித்திருக்கும் இனிமேல் என்கிற ஆல்பம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் அவரது திரைப்படங்களிலேயே காதல் ஜோடிகளை சேர விட மாட்டார். அப்படி இருக்கும் பொழுது ஒரு காதல் பாடலில் நடித்திருக்கிறார் என்பது பலருக்கும் ஆச்சரியமூட்டும் விஷயமாக இருக்கிறது.

இது குறித்து லோகேஷ் கனகராஜிடம் பேசும்பொழுது அந்த பாடலை பார்த்துவிட்டு கமல் உங்களிடம் என்ன கூறினார் என்று கேட்டனர். அப்பொழுது பேசிய லோகேஷ் அந்த பாடலை பார்த்துவிட்டு கமல் என்னிடம் எதுவுமே பேசவில்லை. சுருதிஹாசனிடம் தான் அவர் பேசினார் என்று கூறினார் அப்போது பேசிய சுருதிஹாசன் கூறும் பொழுது எந்த ஒரு பாடலுக்கும் படத்திற்கும் நேர்மையான விமர்சனத்தை அப்பா வழங்குவார்.

அந்த வகையில் அவர் இந்த பாடல் நன்றாக இருக்கிறது என்று கூறினார் அதுவே எனக்கு மிகப்பெரிய மதிப்புரையாக இருந்தது என்று கூறி இருக்கிறார் சுருதிஹாசன்.

To Top