Connect with us

அவங்களோட கம்பேர் பண்ணுனா நான்லாம் ஒண்ணுமே கிடையாது!.. கமல்ஹாசனையே அசர வைத்த பிரபலங்கள்!..

kamalhaasan 2

Cinema History

அவங்களோட கம்பேர் பண்ணுனா நான்லாம் ஒண்ணுமே கிடையாது!.. கமல்ஹாசனையே அசர வைத்த பிரபலங்கள்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதலே நடிகராக நடித்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். அதனாலேயே அவரை சிவாஜிக்கு பிறகு ஒரு முக்கியமான நடிகராக தமிழ் சினிமா பார்க்கிறது.

அந்த அளவிற்கு அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர் சாதாரணமான சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் மட்டும் நடிக்காமல், தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் தரக்கூடிய பல திரைப்படங்களில் நடித்துள்ளார் கமல்ஹாசன்.

அப்படிப்பட்ட கமல்ஹாசனே தமிழ் சினிமாவில் பல நடிகர்களை பார்த்து வியந்துள்ளார். இது குறித்து நடிகர் இளவரசு ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பாபநாசம் திரைப்படத்தில் இளவரசும் கமல்ஹாசனும் சேர்ந்து நடித்தனர் அப்போது கமல்ஹாசன் பேசும்போது நான் எல்லாம் என்னங்க பெரிய உலக நாயகன்.

சாதரண பஸ் கண்டக்டராக இருந்து சென்னைக்கு வந்து போராடி மிகப் பெரும் நடிகர் ஆனாரே ரஜினிகாந்த் அவர் பெரிய நடிகர். அதேபோல சாதாரண ஆர்மோனிய பெட்டியை வைத்துக்கொண்டு கிராமத்தில் இருந்து கனவுகளோடு வந்து இவ்வளவு பெரிய இசையமைப்பாளரான இளையராஜா ஒரு மிகப்பெரும் சாதனையாளர்.

இவர்களுக்கு மத்தியில் எல்லாம் நான் ஒன்றுமே கிடையாது, நான் மிக எளிதாகதான் சினிமா வாய்ப்பையே பெற்றேன். என்று மிக சாதாரணமாக கூறுவாராம் கமலஹாசன்.

To Top