Connect with us

கஷ்டத்தில் வாடிய போட்டோகிராபர்!.. விஷயம் அறிந்து எம்.ஜி.ஆர் செய்த உதவி!..

MGR

Cinema History

கஷ்டத்தில் வாடிய போட்டோகிராபர்!.. விஷயம் அறிந்து எம்.ஜி.ஆர் செய்த உதவி!..

Social Media Bar

திரைத்துறையில் பலருக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளார் நடிகர் எம்.ஜி.ஆர். கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து இவர் சினிமாவிற்கு வந்ததால் தொடர்ந்து கஷ்டப்படும் மக்களுக்கு அதிக உதவிகளை செய்து வந்தார். இப்போது நிறைய திரை பிரபலங்கள் மக்களுக்கு நல்லது செய்வதை பார்க்க முடிகிறது.

ஆனால் அதையெல்லாம் அப்போதே செய்தவர்தான் எம்.ஜி.ஆர். இவர் முதலமைச்சரான பிறகு ஒரு நாள் நிறைய பத்திரிக்கையாளர்கள் இவரை போட்டோ எடுப்பதற்காக வந்திருந்தனர். அதில் மெலிந்த தேகத்துடன் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.

அந்த நபரை எங்கோ பார்த்தது போல் தோன்றியதால் எம்.ஜி.ஆர் அவரை அழைத்தார். நீங்கள் கண்ணப்பன் தானே என அவரிடம் கேட்டார் எம்.ஜி.ஆர். ஆமாம் நான் கண்ணப்பன் தான் என அவர் கூறியுள்ளார். அவர் ஏற்கனவே எம்.ஜி.ஆரின் படத்தில் பணிப்புரிந்துள்ளார்.

அவரை பார்த்தால் ஏதோ கஷ்டத்தில் இருப்பதாக எம்.ஜி.ஆருக்கு தெரிந்தது. எனவே எம்.ஜி.ஆர் தனது உதவியாளரை அழைத்து கண்ணப்பன் வீட்டிற்கு சென்று நிலவரத்தை அறிந்து வர சொன்னார்.

போன உதவியாளர் கண்ணப்பன் வீட்டில் கஷ்டத்தில் இருப்பதையும் மேலும் அவர்களுக்கு தங்குவதற்கு சரியான வீடு கூட இல்லை என்றும் கூறினார். மறுநாள் கண்ணப்பன் வீட்டிற்கு சில உதவியாளர்கள் வந்தனர். அவர்கள் கண்ணப்பனிடம் ஒரு சாவியை கொடுத்து எம்.ஜி.ஆர் உங்களுக்காக ஒரு வீடு வாங்கி கொடுத்துள்ளார். என கூறிவிட்டு சென்றுள்ளனர்.

அந்த அளவிற்கு ஏழைகளுக்கு உதவி செய்துள்ளார் எம்.ஜி.ஆர்

To Top