இப்போ இருக்கும் டீ20 க்கு விதை போட்டவர் இவர்தான்!.. சீக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்!..

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு ஒரு சின்ன இடைவெளியை விட்டு தற்சமயம் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு காலங்களாகவே நடந்து வந்தது. இந்த படத்தின் தாமதம் காரணமாக இயக்குனர் ஷங்கருக்கு தமிழ் சினிமாவில் பெரும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது.

2018 ஆம் ஆண்டு வந்த 2.0 திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் திரைப்படமாக இந்தியன் 2 உள்ளது. அடுத்த மாதம் இந்தியன் 2 திரைப்படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் அந்த படத்திற்கான ப்ரோமோஷனில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர்.

kamalhaasan
kamalhaasan
Social Media Bar

அதனை தொடர்ந்து நடிகர் கமல் மற்றும் ஷங்கர் இருவருமே பல்வேறு பேட்டிகளை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன் கிரிக்கெட்டில் அவரது மலரும் நினைவுகளை பகிர்ந்திருந்தார்.

அதில் அவர் கூறும்போது 1985 கிரிக்கெட் மேட்ச்சில் இந்தியா ஜெயிக்கும் என நான் நினைக்கவே இல்லை. அது ஒரு எதிர்பாராத வெற்றி. அன்றைய தினம் நான் அந்த போட்டியை பார்க்கவில்லை. இந்தியா ஜெயித்துவிட்டது என அறிந்தப்பிறகுதான் மறு ஒளிப்பரப்பில் அந்த போட்டியை பார்த்தேன்.

indian-2
indian-2

ஆனால் 85 என்னும் படம் வந்தப்போதுதான் கிரிக்கெட் விளையாடிய வீரர்களுக்கே அது எதிர்பாராத வெற்றியாக இருந்தது என எனக்கு தெரிந்தது என கூறுகிறார் கமல்ஹாசன். மேலும் அவர் கூறும்போது சீக்கா மாதிரி நாள் முழுவதும் விளையாடும் வீரர்களை பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள்.

முதல் முறையாக டி20 கிரிக்கெட் வந்தப்போது இது என்னது ஆரம்பித்த உடனே முடிந்துவிடுகிறதே என்றுதான் எங்களுக்கெல்லாம் இருந்தது. ஆனால் சீக்கா மாதிரியான ஆட்கள்தான் இப்போது இருக்கும் டி20 கிரிக்கெட்டுக்கு விதை போட்டவர்கள் என கூறியுள்ளார் கமல்ஹாசன்.