Tamil Cinema News
சினிமாவில் எனக்கு என்னவெல்லா செஞ்சுருக்காய்ங்க.. கமல்ஹாசனுக்கு நடந்த கொடுமைகள்.!
சிறுவயதிலிருந்தே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். சின்ன வயதில் இருந்து அவருக்கு நடிப்பின் மீது அதிகம் அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் தொடர்ந்து சினிமாவிலேயே பயணித்து வருகிறார் கமல்ஹாசன்.
இந்த நிலையில் அரசியல் ரீதியாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகள் இருந்து வருகின்றன. அவற்றை கமல்ஹாசன் எப்படி சமாளித்தார் என்பது பலருக்குமே பெரும் ஆச்சரியமான விஷயம் தான்.
ஏனெனில் சிறு வயதிலிருந்து சினிமாவில் இருக்கும் எல்லா நடிகர்களும் பெரிய இடத்தை பிடித்து விடுவது கிடையாது. சினிமாவிற்குள் இருக்கும் போட்டி பொறாமை காரணமாக அவர்கள் நிறைய வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது.
இது குறித்து வடிவேலு ஒரு பேட்டியில் பேசும்பொழுது ஒருமுறை நான் கமலஹாசனை வியந்து இவ்வாறு கூறினேன். கமல்ஹாசன் எப்படி தான் இத்தனை பேருக்கு நடுவில் மிகப்பெரிய ஹீரோ ஆனாரோ என்று கூறினேன்.
அப்பொழுது அது குறித்து கமலஹாசனிடம் வந்து பேசும்பொழுது உனக்கு செஞ்சதை விட எனக்கு இந்த சினிமா நிறைய கஷ்டங்களை செய்து இருக்கு ஆனால் அதை எல்லாம் தாண்டி தான் வந்திருக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறினார் என வடிவேலு அந்த விஷயத்தை பகிர்ந்து இருந்தார்.
