சிவகார்த்திகேயன் இயக்குனர் செய்த பெரும் சம்பவம்!.. 2000 கோடி கைவிட்டு போச்சே.. கவலையில் கமல்ஹாசன்!..

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். ஏனெனில் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திற்கு நிறைய தொகை தேவைப்படும். அவற்றை எல்லாம் சின்ன சின்ன படங்களை தயாரித்து சேர்த்துவிடலாம் என திட்டமிட்டார் கமல்ஹாசன்.

எனவே சிவகார்த்திகேயன், சிம்பு மாதிரியான நடிகர்களை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்கு அவர் முடிவு செய்தார். ஆனால் இதை தனியாக செய்ய முடியாது. வேறு ஏதாவது பெரும் நிறுவனத்தோடு கூட்டணி போட்டு செய்யலாம் என முடிவு செய்தார் கமல்ஹாசன்.

இந்த நேரத்தில்தான் சோனி நிறுவனம் தமிழ் சினிமாவில் படம் தயாரிக்கலாம். ஒரு 2000 கோடியை தமிழ் சினிமாவில் முதலீடு செய்யலாம் என முடிவு செய்திருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட கமல்ஹாசன் சோனியுடன் கை கோர்த்து படங்களை தயாரிக்க துவங்கினார்.

Social Media Bar

சோனி ஒரு கார்ப்பரெட் நிறுவனம் என்பதால் அக்ரிமெண்ட்டை பின்பற்றிதான் அதில் எல்லாமே நடக்கும். படத்திற்கு எவ்வளவு செலவாகும் என கூறி அக்ரிமெண்ட் போட்டு முன்பே அந்த தொகையை வாங்கிகொள்ள வேண்டும். அதற்கு பிறகு ஒரு பைசா கூட அதிகமாக அவர்கள் கொடுக்கமாட்டார்கள்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கமலும் சோனி நிறுவனமும் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர். ராஜ்குமார் பெரியசாமி படப்பிடிப்பை துவங்கிய பிறகு அக்ரிமெண்டில் போட்ட தொகையை விட அதிக தொகை செலவாகும் என கூறியுள்ளார்.

இந்த விஷயத்தை கமல் சோனியிடம் கூற முதல் படமே பிரச்சனையாக இருக்கிறதே எனவே இந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசனோடு திரைப்படம் தயாரிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாம்.