Cinema History
தகாத உறவால் நடந்த விபரீதம்!.. சொத்து வாழ்க்கை இரண்டையும் இழந்த ஸ்ரீ வித்யா… கொடுமைதான்…
மலையாளம் தமிழ் என்று இரண்டு திரைத்துறையிலும் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தவர்தான் நடிகை ஸ்ரீவித்யா. மலையாளத்தில் தமிழை விடவும் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
தமிழில் சிறு வயது முதலே நிறைய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் கூட இளமை காலங்களில் அவர் நடித்த திரைப்படங்கள்தான் அதிகமாக பேசப்படும் படங்களாக இருக்கின்றன.
தமிழில் பிரபலமான படம்:
1975 ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூன்று பிரபலங்களுக்கு முக்கியமான திரைப்படங்களாக இருந்தன. ஸ்ரீவித்யா கமல்ஹாசன், ரஜினிகாந்த் இவர்கள் மூவருக்குமே சினிமா துறையில் ஒரு முக்கிய திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்தது.
அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே ஸ்ரீவித்யாவிற்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு அவர்களது காதல் கை கூடவே இல்லை. அதற்கு ஸ்ரீ வித்யாவின் குடும்பத்தில் இருந்த எதிர்ப்புதான் காரணம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகிறது.
இருந்தாலும் கமலுடன் இருந்த காதல் ஸ்ரீவித்யாவின் மனதை விட்டு நீங்கவே இல்லை என்று தான் கூற வேண்டும். இருந்தாலும் குடும்பத்தின் விருப்பத்திற்கு தடை சொல்லாமல் ஒரு மலையாளத் துணை இயக்குனரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீவித்யா.
திருமண வாழ்க்கை:
ஆனால் ஸ்ரீ வித்யாவை திருமணம் செய்து கொண்ட அந்த இயக்குனர் இவரின் காசின் மீது ஆசை கொண்டுதான் திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து ஸ்ரீ வித்யா அவ்வளவு வருடங்களாக சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை அவர் அழித்து விட்டதாக கூறப்படுகிறது.
தன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் பறிப்போனதை அடுத்து மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளான ஸ்ரீ வித்யா சில நாட்களில் உடல்நல பிரச்சனைகளுக்கு உள்ளானார்.
அதனை தொடர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீ வித்யா பிறகு திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில்தான் தனது இறுதி நாட்களை கழித்தார். சாகும் தருவாயில் கூட கமல்ஹாசனை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஸ்ரீ வித்யா. ஆனால் அவரது ஆசை நிறைவேறாமலேயே காலமானார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்