Cinema History
பெரியார் கோவிலை இடிச்சாரா? திறந்தாரா… வெளிப்படையாக கமல் வைத்த ஸ்டேட்மெண்ட்…
Kamalhaasan : திரை பிரபலங்களை பொருத்தவரை ரஜினிகாந்த் எப்போதுமே தன்னை ஒரு ஆன்மீகவாதியாகதான் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி இருக்கிறார். அதே சமயம் கமல்ஹாசன் எப்போதுமே அவரை ஒரு பகுத்தறிவு வாதியாகதான் வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதனால்தான் ராமர் கோவில் திறக்கப்பட்ட போது கூட ரஜினிகாந்துக்கு பத்திரிக்கை வந்திருந்தது. ஆனால் கமல்ஹாசனை அதற்கு அழைக்கவில்லை. பாபர் மசூதி இடித்தது முதலே அது குறித்து எதிரான மனநிலையைதான் கொண்டிருந்தார் கமல்ஹாசன்.
இதனாலே கமல்ஹாசனை ராமர் கோவிலின் திறப்பிற்கு அழைக்கவில்லை என்ற ஒரு பேச்சு உண்டு. திரைப்படங்களிலும் கூட கடவுள் மறுப்பு கருத்துக்களையும் முன்வைத்து இருக்கிறார் உதாரணமாக அன்பே சிவம் தசாவதாரம் போன்ற திரைப்படங்களில் நாத்திகவாதியாகவே நடித்திருப்பார் கமல்ஹாசன்.

இந்த நிலையில் ஒருமுறை நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்பொழுது அந்த நிகழ்ச்சியை நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கி வந்தார். அதில் கமல்ஹாசன் கூறும் பொழுது கடவுளை வணங்குகிறவர்கள்தான் இதுவரை கோவில்களை இடித்திருக்கிறார்கள்.
கடவுளை வணங்காத பெரியார் கோவிலுக்கு வெளியே நின்ற மக்களையும் உள்ளே செல்ல வேண்டும் என்று கதவைதான் திறந்து விட்டாரே தவிர அவர் எந்த கோவிலையும் இடித்ததில்லை. கடவுள் பக்தி உள்ளவர்கள்தான் இது அனைத்தையும் செய்கின்றனர் என்று நேரடியாக பேசியிருக்கிறார் அந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டாகி வருகிறது.
