Connect with us

விஜய் சேதுபதியுடன் அடுத்து கூட்டணி போடும் கங்கனா ரனாவத்!.. புது ப்ளான் போல!..

Cinema History

விஜய் சேதுபதியுடன் அடுத்து கூட்டணி போடும் கங்கனா ரனாவத்!.. புது ப்ளான் போல!..

Social Media Bar

பாலிவுட்டில் தொடர்ந்து சர்ச்சையாகி வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம் தூம் திரைப்படத்தில் நடித்தார். அப்போது தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆனால் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். க்ரிஷ் 3 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்சமயம் சந்திரமுகி 2 திரைப்படத்தில் சந்திரமுகியாக நடித்துள்ளார் கங்கனா ரனாவத்.

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்பதால் தமிழில் இவருக்கு அதிகமாக வாய்ப்புகள் வருவதில்லை. ஏனெனில் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு குறைவான அளவில்தான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசிய கங்கனா ரனாவத் அடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு திரில்லர் திரைப்படத்தில் நடித்த இருப்பதாக கூறியுள்ளார்.

இந்திய சினிமாவில் பாலிவுட்டிற்கு பிறகு தமிழ் சினிமாதான் பெரிய மார்க்கெட்டாக உள்ளது. எனவே இதில் கால் பதிக்க கங்கனா ரனாவத் ப்ளான் போடுகிறாரோ என ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் உள்ளன.

To Top