முதலில் எதிர்பார்த்தது ஒன்னு.. இப்ப வந்திருக்கிறது ஒன்னு.. கங்குவா முதல் நாள் வசூல் ரிப்போர்ட்.!
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி நேற்று வெளியான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் உருவாகி வந்த காலகட்டத்தில் இருந்தே அந்த திரைப்படத்திலிருந்து தனி வரவேற்பு தமிழ் சினிமாவில் இருந்து வந்தது.
மேலும் ரசிகர்களும் இந்த படத்திற்காக காத்திருக்க தொடங்கினார்கள் ஆனால் நாட்கள் ஆக ஆக படத்திற்கான காத்திருப்பு என்பது பலருக்கும் விரக்தியை ஏற்படுத்தியது. ஆனால் திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகிறது என்பது மட்டும் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வந்த விஷயமாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று கங்குவா திரைப்படம் வெளியானது கங்குவா திரைப்படத்தைப் பொறுத்தவரை 700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பழங்குடியின மக்களின் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்த படத்தின் கதை அமைப்பு.

கங்குவா வசூல் நிலவரம்:
ஆனால் இந்த படம் எதிர்பார்த்த ரீதியில் இருந்ததா என்பதே கேள்விக்குறியாகதான் இருக்கிறது. ஏனெனில் நேற்று படம் வெளியான பிறகு படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன ஒரு பக்கம் நேர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் கூட இன்னொரு பக்கம் எதிர்மறையான விமர்சனங்கள் வருகின்றன.
மேலும் ஒரு நடிகரை சார்ந்து இருக்க கூடிய ரசிகர்கள் பலரும் வேண்டுமென்ற இந்த படத்தை எதிர்மறையாக விமர்சிக்கின்றனர் என்றும் பேச்சு உள்ளது. இதனால் உண்மையிலேயே படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று முதல் நாளிலேயே கங்குவா திரைப்படம் உலக அளவில் 58 கோடி வசூல் செய்து இருக்கிறது முதல் நாள் முக்கால்வாசிக்கு திரையரங்குகள் முழுமை அடைந்ததால் 58 கோடி கங்குவா திரைப்படம் வசூல் செய்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் அமரனை விட இது அதிகம் என கூறப்படுகிறது.