Connect with us

விஜய் சொல்லிதான் அந்த சீன் நடிச்சேன்!.. இவ்வளவு சர்ச்சையாகும்னு எதிர்பார்க்கல – கராத்தே ராஜா ஓப்பன் டாக்!..

karate raja vijay

News

விஜய் சொல்லிதான் அந்த சீன் நடிச்சேன்!.. இவ்வளவு சர்ச்சையாகும்னு எதிர்பார்க்கல – கராத்தே ராஜா ஓப்பன் டாக்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட ஓரளவு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருபவர் கராத்தே ராஜா. கில்லி போக்கிரி மாதிரியான விஜய் படங்களில் இவரை பார்க்க முடியும்.

சினிமா தொடர்பாக எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தவர்தான் கராத்தே ராஜா. கில்லி படத்திற்கு முன்பே இவர் விருமாண்டி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கில்லி திரைப்பட அனுபவத்தை தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறும்போது கில்லி திரைப்படத்தில் நடிக்கும்போது எனக்கு விஜய்யுடன் நல்ல பழக்கமானது. ஒரு காட்சியில் மழை பெய்யும்போது விஜய்யையும் த்ரிஷாவையும் நான் தேடி கொண்டு செல்லும் காட்சி வரும். அந்த சமயத்தில் எனக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது.

அதோடு நான் நடுங்கிக்கொண்டே அந்த காட்சியில் நடித்தேன். அதை பார்த்தது முதல் விஜய் என்மீது அக்கறை காட்ட துவங்கினார். இந்த நிலையில்தான் விஜய்யின் மீது ஓட்டை அடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அதற்காக எனக்கு சண்டை கற்றுக்கொடுத்த மாஸ்டரை அழைத்து வந்தேன்.

அப்போது ஒரு பக்கம் மாஸ்டரும் மறுப்பக்கம் இன்னொரு நபரும் நின்று விஜய்யின் மீது ஓட்டை வைத்து அடிக்க இருந்தனர். ஆனால் அங்கிருந்த என்னை பார்த்த விஜய் ராஜாவே இந்த பக்கம் நிக்கட்டும் என்றார். அப்போது நானும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நடித்தேன்.

ஆனால் நம் மக்கள் அதை கண்டுப்பிடித்தது மட்டுமில்லாமல் என்னை வைத்து கில்லி படத்திற்கே தனியாக ஒரு கதையை எழுதிவிட்டனர் என கூறுகிறார் கராத்தே ராஜா,

To Top