Movie Reviews
சர்தார் படம் எப்படி இருக்கு? – படம் குறித்து மக்கள் விமர்சனம்
வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு இன்று பிரின்ஸ் மற்றும் சர்தார் வெளியானது. இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இன்று காலை முதல் ஷோ காட்சிகள் முடிந்துள்ளது.

மக்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ் மித்ரன் ஏற்கனவே இரும்பு திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இவை இரண்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்கள் என்பதால் பி.எஸ் மித்ரனுக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது.
Read More: The Chosen இயேசு கிறிஸ்து குறித்து வந்த தமிழ் சீரிஸ்.. எத்தனை பேர் பார்த்து இருக்கீங்க..!
இந்நிலையில் இன்று வெளியான சர்தார் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிலர் படத்தின் குறைகளை கூறினாலும் கூட அதிகப்படியான மக்களுக்கு சர்தார் படம் பிடித்துள்ளது. படத்தின் திரைக்கதை சிறப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.
