3 வருச உழைப்பும் நாசமா போச்சு!.. படத்தில் இருந்து விலகிய கார்த்தி!.

நடிகர் கார்த்தியை வைத்து இயக்குனர் நலன் குமாரசாமி வெகு நாட்களாக இயக்கி வரும் திரைப்படம் வா வாத்தியாரே வா. இந்த திரைப்படத்தின் திரைக்கதை வேலைகள் கொரோனா துவங்குவதற்கு முன்பே துவங்கிவிட்டன.

ஆனால் அப்போது கொரோனா காரணமாக படப்பிடிப்பை துவங்க முடியவில்லை. அதற்கு பிறகும் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் என வரிசையாக பிஸி ஆகிவிட்டார். கார்த்தி. இந்த நிலையில் இப்போதுதான் கார்த்தி கொஞ்சம் கால்ஷூட் கொடுத்தார். அதனை தொடர்ந்து வா வாத்தியாரே வா திரைப்படம் துவங்கியது.

படக்கதை:

இந்த படத்தின் கதையே சுவாரஸ்யமானதாக இருந்தது. கார்த்தி வயிற்றில் இருக்கும்போதே தன் மகன் எம்.ஜி.ஆர் மாதிரி வர வேண்டும் என எம்.ஜி.ஆர் படங்களாக அவரது தாய் பார்க்க ஆனால் அதில் வரும் நம்பியாரை நோட் செய்யும் கார்த்தி வளர்ந்து ஒரு கொள்ளைக்காரனாக மாறுகிறார்.

karthi
karthi
Social Media Bar

அதே சமயம் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரமும் அவருக்கு ஸ்பிலிட் பர்சனாலிட்டியாக இருக்க, எப்போதெல்லாம் எம்.ஜி.ஆராக மாறுகிறாரோ அப்போதெல்லாம் நன்மை செய்பவராக மாறுவிடுவார் கார்த்தி.

இந்த படத்தின் பாதி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்சமயம் இயக்குனருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் கார்த்தி. இதனையடுத்து இத்தனை வருட உழைப்பு வீணாகிவிட்டதே என இயக்குனரும் தயாரிப்பாளரும் கவலையில் உள்ளனராம்.