News
உங்கக்கிட்ட அப்படி நடந்திருக்க கூடாது!. லாரன்ஸிடம் மேடையில் மன்னிப்பு கேட்ட ரஜினி இயக்குனர்!.
தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தொடர்ந்து இவர் வெற்றி படங்களாகவே கொடுத்து வருகிறார் தற்சமயம் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு பிறகு இவர் நடித்து வரும் திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த திரைப்படத்தில் ரவுடியாக லாரன்ஸும் படம் எடுக்கும் இயக்குனராக எஸ்.ஜே சூர்யாவும் நடிக்கின்றனர். இந்த நடிகர்கள் காம்போவாலேயே இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு உண்டாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த நிலையில் படப்பிடிப்பில் நடந்த சுவாரஷ்யமான விஷயம் ஒன்றை ராகவா லாரன்ஸ் பகிர்ந்து இருந்தார். நடனம் ஆடிக் கொண்டிருந்த பொழுது அதை கார்த்திக் சுப்புராஜிடம் ஆடி காட்டினார் லாரன்ஸ்.
அதைப் பார்த்த கார்த்திக் சுப்புராஜ் எப்படி ஆட வேண்டும் என்று லாரன்ஸ்க்கு கற்று கொடுத்துள்ளார். அது குறித்து லாரன்ஸ் கூறும் பொழுது ஒரு டான்ஸ் மாஸ்டர் எனக்கே அவர் எப்படி ஆட வேண்டும் என்று சொல்லித் தருகிறார் என்று கூறுகிறார். அதற்கு பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு பெரிதாக நடனமாட தெரியாது, அது ஒரு ரவுடி கதாபாத்திரம் என்னும்போது லாரன்ஸ் ஆடும் அளவிற்கு சிறப்பான நடனத்தை அந்த கதாபாத்திரம் வெளிப்படுத்தக் கூடாது என்று நினைத்தேன் அதனால்தான் அவரது நடனத்தை மாற்றி அமைத்தேன், அது தவறு என்று நினைத்தால் இப்போதே அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று மேடையிலேயே எழுந்து அவரிடம் மன்னிப்பு கேட்டார் கார்த்திக் சுப்புராஜ்.
