Connect with us

ரஜினியால் என் ஆசை எல்லாம் கனவாவே போயிடும்னு நினைச்சேன்!.. நம்பி காத்திருந்த கார்த்திக் சுப்புராஜ்…

rajinikanth karthik subburaj

Cinema History

ரஜினியால் என் ஆசை எல்லாம் கனவாவே போயிடும்னு நினைச்சேன்!.. நம்பி காத்திருந்த கார்த்திக் சுப்புராஜ்…

Social Media Bar

Karthik subburaj: கார்த்திக் சுப்புராஜ் தமிழில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் அவரது முதல் இரண்டு திரைப்படங்களே தமிழ் சினிமாவில் அவர் எவ்வளவு வளர்ச்சி காணப்போகிறார் என காட்டியது. அதில் அவர் முதலில் எடுத்த திரைப்படம் பீட்சா அடுத்து வந்த திரைப்படம் ஜிகர்தண்டா.

இருந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகராவார். சினிமாவிற்கு வரும்போதே ரஜினிகாந்தை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. இந்த நிலையில்தான் லிங்கா கோச்சடையான் என இரு படங்களும் ரஜினிகாந்திற்கு பெரும் தோல்வியை கொடுத்தது.

rajinikanth
rajinikanth

எனவே புது இயக்குனர்கள் படத்தில் நடிக்கும்படி ரஜினிக்கு அட்வைஸ் கொடுத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த். அதன்படி கதை சொல்வதற்காக பா.ரஞ்சித் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் அழைத்து வரப்பட்டனர். பா.ரஞ்சித் அப்போது கபாலி படத்தின் கதையை கூறினார்.

ஆனால் கார்த்திக் சுப்புராஜிடம் ரஜினிகாந்திடம் சொல்ல எந்த கதையும் இல்லை. இருந்தாலும் ரஜினிகாந்த் அடுத்து உங்கள் படத்தில் நடிக்கிறேன் கதையை தயார் செய்யுங்கள் என கார்த்திக் சுப்புராஜிடம் கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜும் ரஜினிக்காக கதையை எழுதினார்.

காலா படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து படம் எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் காலா படத்திற்கு பிறகு அரசியலுக்கு செல்லவிருப்பதாக அறிவித்தார் ரஜினிகாந்த். இதனால் ரஜினியை வைத்து படம் எடுப்பது கனவாகவே போய்விடும் என நினைத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

ஆனால் ரஜினிகாந்த் அப்போதும் நேரம் ஒதுக்கி பேட்ட படத்தை நடித்து கொடுத்தார். பேட்ட படமும் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

To Top