Cinema History
ஜிகர்தண்டா படம் உருவாவதற்கு ஒரு ரவுடிதான் முக்கிய காரணம்… அதிர்ச்சி தகவல் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!..

Director Karthik subbaraj: தமிழில் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக இயக்குனரான ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியைதான் கொடுத்துள்ளன.
அவரது முதல் படம் பீட்சாவாக இருந்தாலும் அவருக்கு பெரும் அடையாளமாக அமைந்த திரைப்படம் ஜிகர்தண்டாதான். ஜிகர்தண்டா திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புது வித கதை அமைப்பை கொண்டிருந்தது.
சினிமாவின் மீது ஈர்ப்பு கொண்ட ரவுடி ஒருவனை வைத்து ஒரு இயக்குனர் படம் எடுப்பதாக அதன் கதை இருக்கும். இந்த கதை உருவாவதற்கு ஒரு ரவுடிதான் உண்மையிலேயே காரணம் என ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
அவர் குறும்படங்கள் எடுத்து வந்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்க திட்டமிட்டிருந்தாராம். அப்போது ஒரு ரவுடியை சந்தித்திருக்கின்றனர். அந்த ரவுடி முதலில் குற்றங்கள் எல்லாம் செய்து அதனால் சிறைக்கு சென்று வந்து மீண்டும் திருந்தி வாழ்ந்து வந்தார்.
அவரிடம் கதை தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் பேசும்போது அவர் அந்த கதையில் அவரே நடிப்பதாக கூறினார். அந்த நேரத்தில்தான் கார்த்திக் சுப்புராஜ் இப்படி படம் நடிக்க ஆசைப்படும் ரவுடியை வைத்து திரைப்படம் எடுக்கும் ஒரு இயக்குனரின் நிலை என்னவாக இருக்கும் என யோசித்தார்.
பின்னர் இதுவே அவரது திரைப்படத்திற்கான கதையானது. முதலில் அவர் எழுதிய கதை ஜிகர்தண்டாதான் என்றாலும் அப்போது அது அதிக பட்ஜெட் கொண்ட படமாக இருந்ததால் கார்த்திக் சுப்புராஜ் முதலில் பீட்சா திரைப்படத்தை இயக்கினார்.