Connect with us

கோட்சேவ பத்தி பேச முடியாத ஒரு நாட்டில் இருக்கிறோம்!.. வெளிப்படையாக கூறிய கார்த்திக் சுப்புராஜ்!..

karthik subbaraj

News

கோட்சேவ பத்தி பேச முடியாத ஒரு நாட்டில் இருக்கிறோம்!.. வெளிப்படையாக கூறிய கார்த்திக் சுப்புராஜ்!..

Social Media Bar

Director Karthik subbaraj: தமிழில் வரிசையாக வெற்றி படங்கள் கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்சமயம் வெளிவந்த ஜிகர்தண்டா 2 திரைப்படம் கூட தமிழக அரசு வீரப்பனை பிடிக்க பழங்குடி மக்கள் மீது நிகழ்த்திய வன்முறையை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது என ஒரு பேச்சு உண்டு.

இப்படியாக ஒரு இயக்குனராக இருந்தாலும் கூட தொடர்ந்து சமூக அக்கறை கொண்டவராக கார்த்திக் சுப்புராஜ் இருப்பதால் அந்த பிரச்சனைகளை தனது திரைப்படங்களில் சில சில இடங்களிலாவது அவர் காட்டி விடுகிறார்.

மேலும் அவர் பல இடங்களில் பேசும்போதும் கூட சமூக அக்கறையுடன் பல விஷயங்களை பேசுகிறார். பேட்ட திரைப்படத்தில் கூட காதல் தினத்தை எதிர்த்து இந்து அமைப்பினர் செய்யும் வன்முறைகளை திரைப்படம் வழியாக காட்டியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

karthiksubbaraj

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அவர் பேசும்போது நான் கோட்சே குறித்து எனது திரைப்படம் ஒன்றில் வசனம் வைத்தேன். ஆனால் அந்த படம் சென்சாருக்கு சென்றப்போது அந்த படத்தில் கோட்சே தொடர்பான வசனத்தை நீக்க சொன்னார்கள்.

காந்தியை சுட்டு கொன்ற ஒரு நபரை குறித்து வசனம் வைப்பதில் இந்தியாவில் சிக்கல் உள்ளது. இங்கு நீங்கள் காந்தியை விமர்சித்து கூட பேசிவிடலாம் ஆனால் கோட்சேவை விமர்சித்து பேசிவிட முடியாது. காந்தியின் நினைவு தினத்தின் போதுகூட காந்தி இறந்த தினம் என கூறுவார்களே தவிர காந்தி கொலை செய்யப்பட்ட தினம் என யாரும் சொல்ல மாட்டார்கள் என கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்தார்.

காந்தியின் நினைவு தினமான இன்று அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top