Tamil Cinema News
ரஜினி படம் பண்ணுன பிறகும் அதை செய்யலை.. எல்லோரும் செஞ்சதை தவறவிட்ட கார்த்திக் சுப்புராஜ்.!

தமிழ் இயக்குனர்களில் மிக முக்கியமானவராக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இருந்து வருகிறார். அவரது முதல் படமான பீட்சா திரைப்படத்தில் துவங்கி அவரது திரைப்படங்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.
அவர் இயக்கிய ஜிகர்தண்டா 2 திரைப்படமே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் ரெட்ரோ இந்த திரைப்படம் வருகிற மே1 அன்று திரையரங்கிற்கு வர இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்கு முன்பே கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்தை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் பெரும்பாலும் பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள் குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் இயக்க மாட்டார்கள். பெரிய பட்ஜெட்டில்தான் திரைப்படம் இயக்குவார்கள். ஆனால் ரஜினி படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் அந்த மாதிரி செய்யவில்லை.
குறைந்த பட்ஜெட் படங்களாகதான் அவர் இயக்கி வந்தார். இதுக்குறித்து அவர் கூறும்போது எனக்கு கோடிகளை அதிகரித்து படம் பண்ண வேண்டும் என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஆனால் அதே சமயம் எனக்கு பிடித்த வகையில் திரைப்படங்களை எடுத்து வருகிறேன் என அவர் கூறியுள்ளார்.