ரஜினிக்காக நான் எழுதுன கதைதான் அந்த படம்… ஓப்பன் டாக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்.!
பீட்சா திரைப்படத்தை இயக்கியது மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு கிடைக்க துவங்கியது. முக்கியமாக ஜிகர்தண்டா திரைப்படம் அவரது மார்க்கெட்டை வேறு லெவலில் உயர்த்தியது.
அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். அந்த திரைப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ.
இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்தார். 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் 107 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது இந்த கதையை முதலில் நான் ரஜினிகாந்திடம்தான் கூறினேன். அந்த கதையை எழுத எழுத அது ஒரு காதல் கதையாகதான் மாறியது. ஒருவேளை ரஜினி சாருக்கு அந்த கதையை எழுதியிருந்தால் கதையை மாற்றியிருப்பேன்.
கபாலி படம் மாதிரி அவரது மனைவியை தேடுவது போல வைத்திருக்கலாம். ஆனால் இந்த கதை ரஜினி சாருக்கு செட்டாகும் கதைதான் என கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.