News
மக்கள் மலத்தை வாங்குறாங்க!.. பயில்வான் ரங்கநாதனோடு மக்களையும் சேர்த்து திட்டிய நடிகை கஸ்தூரி!.
சினிமா என்றாலே எப்பொழுதும் சர்ச்சைகளும், வதந்திகளும் வளம் வந்து கொண்டு இருப்பது வழக்கமான ஒன்றுதான். தற்பொழுது சில பத்திரிக்கையாளர்கள் சினிமா விமர்சனம் செய்து வருவதும் சினிமாவில் நடக்கும் சில விஷயங்களை தெரிவித்து வருவதும் வாடிக்கையாக கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது சர்ச்சையான சில விஷயங்களை பேசி ட்ரெண்டிங்கில் இருப்பவர் பயில்வான் ரங்கநாதன்.
அந்த வகையில் சில சினிமா விமர்சகர்கள், பத்திரிக்கையாளர்கள் சினிமாவில் நடக்கும் சில விஷயங்களை சேனல் பேட்டிகளில் தெரிவித்து வருகிறார்கள். அதுபோல பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றி தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை வேடங்களிலும், துணைப் பாத்திரங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர் சினிமா நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்களை தரம் குறைவாக விமர்சித்து வருவதை பலரும் கண்டித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இவரை பிரபல நடிகை ஒருவர் கோபமாக திட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பயில்வான் ரங்கநாதனை குறித்து பேசிய நடிகை
பிரபல சினிமா நடிகையான கஸ்தூரி பயில்வான் ரங்கநாதனை கோபமாக திட்டி வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, பயில்வான் ரங்கநாதன் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அந்தரங்க விஷயங்கள் குறித்தும் அசிங்கமான நாரப் பொழப்பை நடத்தி வருகிறார்.

பிழைப்பதற்கு எத்தனையோ வழி இருக்கிறது. ஆனால் இது போன்ற ஒரு கேவலமான வழியை அவர் தேர்ந்தெடுத்து இருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், போதை பொருள் போன்றவற்றை விற்று.. ஒரு குடியை கெடுத்து சம்பாதிக்கிறார்கள். அதில் அவர்களுக்கு பணம் வரலாம். ஆனால் இது ஒரு பொழப்பா? அது போல தான் பதில் மக்கள் மலத்தை விற்று விற்று பொழப்பு நடத்துகிறார் பயில்வான் ரங்கநாதன்.
இவர் கொடுக்கும் பேட்டியில் ஒரு உண்மையை மட்டும் சொல்லிவிட்டு, மீதி சொல்லும் அத்தனையும் பொய் சொல்லுகிறார். இதனை பார்க்கும் மக்களும் ஏமாந்து விடுகிறார்கள். இவர் கூறும் ஒரு உண்மையை நம்பி அவர் கூறும் அனைத்துமே உண்மை என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அத்தனையும் அவரால் புனையப்பட்ட குப்பைகள் தான். எத்தனையோ பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு சிலர் இதுபோன்று நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களை பேசி பொழப்பு நடத்துகிறார்கள்.
அவரின் தாய் வளர்ப்பு சரியில்லை
இவர் இவ்வாறு கூறும் இந்த விஷயங்களை கேட்பதற்கு தமிழ்நாட்டில் சில ஆட்கள் இருக்கிறார்கள். இவ்வாறு கேட்கும் நபர்கள் மக்களின் மலத்தை வாங்க தயாராக இருப்பதால், அவரும் அதனை அழகாக பேக் செய்து விற்கிறார்கள். மக்கள் எப்பொழுது இது மலம் என்று தவிர்த்து விடுகிறார்களோ.. அப்பொழுது தான் பயில்வான் போன்ற நபர்கள் பேச மாட்டார்கள்.

இது பயில்வானுக்கு மட்டும் அல்ல. இதுபோல வம்புக்கு அலைபவர்களும் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும் யார் யாரோடு கூத்தடிச்சா என்ன? யார் யாரோடு போனா என்பதை தேடித் தேடிப் பார்க்கிறார்கள். இதனால் நம்மை விட மோசமானவர்களும் பலர் இருக்கிறார்கள் என்ற திருப்தி அவர்களுக்கு கிடைக்கிறது.
பயில்வான் தாயைப் பற்றி நான் தவறாக பேச விரும்பவில்லை. ஆனால் பயில்வான் ரங்கநாதன் தாயின் வளர்ப்பு சரியில்லை. மேலும் அவர் தாய்மை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். அவருக்கு தாய்மையின் மகத்துவம் தெரியவில்லை. இவ்வாறாக கடுமையான வார்த்தைகளால் பயில்வான் ரங்கநாதனை நடிகை கஸ்தூரி விளாசியுள்ளார்.
