Connect with us

காதல் மன்னன் படத்தை நானே முழுசா பார்க்கல!. மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கும் திலோத்தமா!.

kathal mannan

Cinema History

காதல் மன்னன் படத்தை நானே முழுசா பார்க்கல!. மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கும் திலோத்தமா!.

Social Media Bar

Kathal Mannan: சினிமாவைப் பொறுத்தவரை கதாநாயகர்களை விடவும் கதாநாயகிகள் சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு நிறைய போராட வேண்டி இருக்கிறது. ஏனெனில் ஒரு சில படங்களிலேயே ஒரு கதாநாயகனாக நடிக்கும் நடிகர் பிரபலம் ஆகிவிட முடியும்.

ஆனால் கதாநாயகியாக நடிப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மார்க்கெட் போகலாம். இப்போதாவது தொழில்நுட்பம் அதிகமாக இருப்பதால் instagram போன்ற சமூக வலைதளங்கள் வழியாக மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாக இருக்கின்றனர் நடிகைகள்.

ஆனால் இணையமே இல்லாத காலகட்டங்களில் எப்படி இருந்திருக்கும். ஆனால் அப்போதும் கூட ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெற்றவர் நடிகை மண்ணு. காதல் மன்னன் திரைப்படத்தில் திலோத்தமா கதாபாத்திரத்தில் இவர் நடித்தார்.

அந்த ஒரு படத்தை தவிர வேறு எந்த படத்திலும் இவர் நடிக்கவில்லை காதல் மன்னன் திரைப்படத்தில் நடிக்கும் பொழுதே அதில் விருப்பம் இல்லாமல்தான் நடித்ததாக மண்ணு கூறியுள்ளார். அப்போது அஜித் கூட அவருக்கு அறிவுரை கூறினாராம்.

பார்ப்பதற்கு அழகாகதானே இருக்கிறீர்கள் ஏன் கதாநாயகியாக நடிக்க மாட்டேன் என்கிறீர்கள் என கேட்டதாக இவர் கூறியுள்ளார். பல வருடங்கள் கழித்து தற்சமயம் மீண்டும் சினிமாவிற்கு வருவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளார் மண்ணு. ஒரு பேட்டியில் இவர் கூறும் பொழுது எனது நடிப்பை பார்க்க எனக்கே வெட்கமாக இருக்கும். அதனால் இன்றுவரை காதல் மன்னன் திரைப்படத்தை நான் முழுதாக பார்க்கவே இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த பிரச்சனை சில நடிகர்களுக்கு இருப்பதை பார்க்க முடிகிறது ஏனெனில் நடிகர் மணிகண்டனும் ஒரு முறை பேட்டியில் இதேபோல அவர் நடித்த எந்த படத்தையும் அவர் பார்த்ததில்லை என்று கூறியிருந்தார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top