அமரனுக்கு டஃப் கொடுக்குமா கவின் படம்.. எப்படி இருக்கு ப்ளடி பெக்கர்.. திரைப்பட விமர்சனம்..!
இந்த தீபாவளியை முன்னிட்டு நான்கு திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன. அந்த வகையில் பெரிய படமாக சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அதற்கு போட்டியாக வெளியாகி இருக்கும் திரைப்படங்களில் நடிகர் கவின் நடித்த ப்ளடி பெக்கர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
கவின் இப்பொழுதுதான் வளர்ந்து வரும் நடிகர் என்றாலும் கூட அவர் சிவகார்த்திகேயனோடு போட்டி போட்டு இருப்பது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்து இருக்கிறது. இந்த படத்தை சிவபாலன் முத்துக்குமார் என்பவர் இயக்கியிருக்கிறார். இயக்குனர் நெல்சன் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார்.
இந்த நிலையில் ப்ளடி பாக்கரின் கதை என எப்படி இருக்கிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
படத்தின் கதை:
இந்தப் படத்தின் கதையைப் பார்த்தால் இதில் கவின் ஒரு பிச்சைக்காரனாக இருக்கிறார். வழக்கமான சோகமான பிச்சைக்காரனாக இல்லாமல் மிகவும் ஜாலியான ஒரு பிச்சைக்காரர்களாக இருந்து வருகிறார்.

இப்படி இருக்கும் பொழுது ஒரு நாள் பிச்சைக்காரர்கள் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருக்கும் வேளையில் பிரபல நடிகர் ஒருவரின் நினைவு தினத்துக்காக பிச்சைக்காரர்களுக்கு உணவளிப்பதாக கூறுகிறார்கள். எனவே அந்த இடத்திற்கு உணவு சாப்பிட செல்கிறார் கவின்.
அது ஒரு பெரிய மாளிகையாக இருக்கிறது எனவே அந்த மாளிகைக்குள் சென்று பார்க்க ஆசைப்படுகிறார் கவின் அதே போல அங்கு செல்கிறார் அப்படி செல்லும் பொழுது அந்த மாளிகைக்குள் கவின் மாட்டிக்கொள்கிறார். அந்த பெரிய நடிகரின் வாரிசுகள் அந்த மாளிகைக்கு வருகின்றனர்.
அந்த குறிப்பிட்ட நினைவு தினத்து அன்று அவர்களுக்கு சொத்து பிரிக்கப்படுவதற்கான வேலைகள் நடக்கின்றன. ஆனால் இவர்கள் ஏற்கனவே இவர்கள் வாரிசுகளில் ஒருவரை கொன்று விடுகின்றனர். அதற்கு பதிலாக நடிக்க வைக்க ஆள் கிடைக்காததால் கவினை நடிக்க வைக்கின்றனர்.
இதற்கு நடுவே இந்த கூட்டத்திடம் இருந்து கவின் எப்படி தப்பிக்கிறார் என்பதே படத்தின் கதையாக இருக்கிறது. இதில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் படம் இருந்தாலும் கூட ப்ளாக் காமெடி திரைப்படம் என்பதால் மிகவும் மெதுவாகதான் கதை சொல்கிறது.
படத்தில் பரபரப்பை தூண்டும் வகையில் அந்த குடும்பமே கொலை செய்யக்கூடிய குடும்பம் என்னும் வகையில் கதை அம்சம் அமைந்து இருக்கிறது. ஆனால் கமர்சியலாக பார்க்கும் பொழுது அமரன் திரைப்படத்திற்கு இந்த படம் ஈடு கொடுக்குமா என்பது சந்தேகமே என கூறப்படுகிறது.