News
வசூலில் அரண்மனையை தொட்ட ஸ்டார் திரைப்படம்!.. வசூல் நிலவரம்!.
விஜய் டிவியில் சின்னத்திரை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கவின். அதன் பிறகு பிக் பாஸ் மாதிரியான விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர் கொஞ்சம் கொஞ்சமான சினிமா பக்கம் ஆர்வம் காட்ட துவங்கினார்.
இவரது நடிப்பில் லிஃப்ட் என்கிற திரைப்படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியானது. அதில் அந்த படம் ஓரளவு வரவேற்பையும் பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்து கவின் நடித்த திரைப்படம் டாடா. டாடா திரைப்படத்தை பொறுத்தவரை குடும்பங்கள் கொண்டாடும் ஒரு திரைப்படமாக டாடா திரைப்படம் இருந்தது.

அதனை தொடர்ந்து தற்சமயம் கவின் நடித்திருக்கும் திரைப்படம் ஸ்டார். ப்யார் ப்ரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். நடிகனாக வேண்டும் என ஆசைப்படும் ஒரு இளைஞனின் கதையாக ஸ்டார் திரைப்படம் உள்ளது.
இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான 9 நாட்களில் இதுவரை 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது ஸ்டார். இது இந்த படத்திற்கு நல்ல வெற்றி என்றே கூற வேண்டும். அடுத்து ப்ளடி பக்கர் என்னும் படத்தில் நடித்து வருகிறார் கவின்.
