News
ஸ்டார் படம் எப்படி போகுது?.. முதல் நாள் வசூல் நிலவரம்!..
விஜய் டிவியின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் கவினும் ஒருவர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதனை தொடர்ந்து எப்படியாவது தமிழ் சினிமாவில் கதாநாயகி விட வேண்டும் என்பது கவினின் ஆசையாக இருந்தது.
இந்த நிலையில் கவின் நடித்த லிஃப்ட் எனும் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது. அதனை தொடர்ந்து கவின் அடுத்து நடித்த திரைப்படம் டாடா. டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கவின் கதை தேர்ந்தெடுக்கும் முறையின் மூலமே மக்கள் மத்தியில் தன்னை பிரபலமாக்கி கொள்கிறார் என கூறலாம். இந்த நிலையில் நேற்று கவின் நடிப்பில் ஸ்டார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானப்போதே இதற்கு கொஞ்சம் வரவேற்பு இருந்தது.
இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டில் 2 கோடிக்கும் மற்ற மாநிலங்களில் 75 லட்சத்திற்கும் ஓடி வசூல் செய்துள்ளது ஸ்டார் திரைப்படம். இந்த திரைப்படம் எப்படியும் டாடா திரைப்படத்தின் வசூலை ப்ரேக் செய்யாது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
