News
படம் மொத்தமும் ட்ரைலர்லையே வந்துட்டே!.. விமர்சனத்துக்குள்ளான கவினின் ஸ்டார் ட்ரைலர்!..
தமிழ் சினிமாவை பொறுத்தவரை புது முகங்களுக்கு எப்போதுமே வரவேற்புகள் இருந்து வருகின்றன என கூறலாம். ஏனெனில் பெரும் நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பதால் குறைந்த முதலீட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஹீரோ பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
அப்படியாக புது முக கதாநாயகர்களில் நடிகர் கவின் முக்கியமானவர். டாடா திரைப்படம் இவருக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. இதுவரை அவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்களில் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் இல்லாததால் குறைவாக நடித்தாலும் கூட அது ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் இருந்தது.
ஆனால் தற்சமயம் கவின் நடித்து வெளியாகியிருக்கும் ஸ்டார் படத்தின் ட்ரைலரை பார்க்கும்போது இந்த படத்தில் கவின் கடுமையாக நடிக்க வேண்டிய கதாபாத்திரம் இருப்பதை பார்க்க முடிகிறது. ஒரு இளைஞன் நடிகராவதற்கு இடையே உள்ள போராட்டத்தை பேசும் படமாக ஸ்டார் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு ஒரு டெம்பிளேட் இருப்பது போல இந்த மாதிரியான திரைப்படங்களுக்கும் ஒரு டெம்பிளேட் உண்டு. முதலில் கதை மிக பாசிட்டிவாக துவங்கும். கதாநாயகன் தன்னுடைய இலக்கை நோக்கி சவால்களை தாண்டி முன்னேறி கொண்டிருப்பான்.
இடைவேளைக்கு சற்று முன்னர் அவன் வாழ்க்கையில் அல்லது இலக்கில் விழும் பெரிய அடி அவனை துவழ செய்யும், அழ வைக்கும் பிறகு க்ளைமேக்ஸிற்குள் அவன் மீண்டெழுந்து இலக்கை அடைவது கதையாக இருக்கும். சிங்கப்பூர் சலூன், அன்னப்பூரணி ஆகிய அனைத்து படங்களிலும் இந்த டெம்பிளேட்டை பார்க்க முடியும்.
கவின் நடித்திருக்கும் ஸ்டார் திரைப்படமும் அந்த டெம்ப்ளேட்டிற்குள்தான் இருப்பதாக தெரிகிறது என்கின்றனர் சினிமா விமர்சகர்கள். ஆனால் படம் வெளியானால்தான் எதுவும் உறுதியாக தெரியும்.
