பேட்டிக்கு வந்த இடத்தில் நடந்த நிகழ்வு.. பெண் தொகுப்பாளரிடம் பாடம் கற்றுக்கொண்ட கவின்..!
நடிகர் கவின் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் நடிகர்களுக்கு ஒரு சில திரைப்படங்களிலேயே கவினுக்கு கிடைக்கும் அளவிற்கான வரவேற்பு என்பது கிடைப்பது கிடையாது
ஆனால் கவின் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முக்கியமாக கதைகளின் மீது அவருக்கு அதிக கவனம் இருக்கிறது. ஒவ்வொரு திரைப்படத்தின் கதையும் மக்கள் மத்தியில் என்ன மாதிரியான வரவேற்பு பெரும் என்பதை அறிந்து நடித்து வருகிறார் கவின்
அதனால்தான் இவ்வளவு சீக்கிரத்திலேயே சிவகார்த்திகேயன் மாதிரியான பெரிய நடிகர்களுடன் போட்டி போட்டு படங்களை அவரால் நடிக்க முடிகிறது இப்பொழுது தீபாவளியை முன்னிட்டு அவர் நடிப்பில் பிளடி பெக்கர் என்கிற திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
கவினுக்கு கிடைத்த வரவேற்பு:

ஒரு நடிகர் தீபாவளி அன்று தன்னுடைய திரைப்படத்தை வெளியிட வேண்டுமென்றால் அதற்கு வெகு காலங்களாகும். ஆனால் கவின் வெகு சீக்கிரமாகவே அப்படியான இடத்தை பெற்று இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட கவின் தன்னுடைய வளர்ச்சி குறித்து பெண் தொகுப்பாளர் ஒருவரிடம் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது நான் பல இடங்களில் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்.
உதாரணத்திற்கு உங்களிடம் இருந்து கூட ஒரு விஷயத்தை கற்றுக் கொள்கிறேன் காலையிலிருந்து பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள், இரவு 7 மணி ஆகிவிட்டது. இப்பொழுதும் உங்கள் முகத்தில் பொலிவு அப்படியே இருக்கிறது எப்படி இவ்வளவு ஆக்டிவாக பணிபுரிகிறீர்கள் என்பதை இப்பொழுது நான் உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி நல்ல விஷயங்களை பலரிடம் கற்றுக் கொண்டதுதான் எனக்கு உதவியாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார் கவின்.